“மதச்சார்பின்மையின் மரபுகளை உயிர்ப்புடன் வைத்திருக்கும் வகையில், ஜம்முவில் உள்ள தோடா மாவட்டத்தின் அர்னோரா பகுதியில் இந்திய ராணுவத்தால் இப்தார் விருந்து நடத்தப்பட்டுள்ளது” என்று ஏப்ரல் 21 அன்று ஜம்முவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
இந்த ட்வீட்டுக்கு பதிலளித்த சுதர்சன் நியூஸ் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் சுரேஷ் சாவாங்கே, “இப்போது இந்திய ராணுவத்தில் கூட இந்த நோய் பரவிவிட்டதா? வருத்தமளிக்கிறது” என்று விமர்சித்திருந்தார்.
சுரேஷ் சாவாங்கேவின் கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், சுரேஷ் சாவாங்கேவின் விமர்சனத்திற்குப் பிறகு இந்திய ராணுவம் அளித்த இப்தார் விருந்து பற்றிய ட்வீட்டை ஜம்முவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அவரது ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளார்.
சுரேஷ் சாவாங்கேவின் விமர்சனத்துக்கு பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்தோ, இந்திய ராணுவத்திலிருந்தோ இதுவரை எந்த பதிலும் வரவில்லை.
Source : the hindu
மரண படுக்கையிலிருந்து Congress எழுமா?
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.