டிசம்பர் 4ஆம் தேதி நாகாலாந்து மாநில மோன் மாவட்டத்தில் இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, நாகாலாந்து அரசால் அமைக்கப்பட்ட சிறப்புப் விசாரணை குழுவானது இத்துப்பாக்கிச்சூட்டில் சம்பந்தப்பட்ட இராணுவ வீரர்களை விசாரிக்கவுள்ளது.
சிறப்பு விசாரணை குழுவின் உறுப்பினர்களுக்கு இராணுவம் வீரர்களை விசாரணை நடத்த இந்திய இராணுவம் அனுமதி அளித்துள்ளது என்று நாகாலாந்து காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இருப்பினும், இராணுவ வீரர்களை விசாரணை குழுவின் உறுப்பினர்கள் நேருக்கு நேராக விசாரிப்பார்களா அல்லது விசாரணை குழுவின் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளிப்பார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. நேருக்கு நேராக விசாரணை நடத்தவே அதிக வாய்ப்பு இருப்பதாக நாகாலாந்து அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரிக்க இராணுவத் தரப்பில் அமைக்கப்பட்ட இராணுவக் குழு நேற்று(டிசம்பர்29), சம்பவம் நடந்த இடம் உட்பட மோன் மாவட்டத்தில் உள்ள சில இடங்களை பார்வையிட்டுள்ளது. மேஜர் ஜெனரல் ஒருவரின் தலைமையில் இக்குழு செயல்பட்டு வருகிறது.
விசாரணைக்கு வரும் இராணுவ குழுவின் சீருடை மற்றும் ஆயுதங்களைப் பார்த்து கிராமவாசிகள் கோபமடைவார்கள் என்பதால், வருபவர்கள் சீருடை அல்லது ஆயுதங்களுடன் வர வேண்டாம் என்று கொன்யாக் பழங்குடியினர் சிவில் சமூக அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளது.
Source: New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.