முப்படைத் தலைவர் ஜெனரல் பிபின் ராவத் உள்ளிட்ட 14 உயிரிழந்த குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான முப்படைகளின் விசாரணை குழு அதன் ஆரம்பக்கட்ட கண்டுபிடிப்புகளை அறிக்கையாக சமர்ப்பித்துள்ளது.
நேற்று(ஜனவரி 14), இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள அவ்வறிக்கையில், வானிலையில் ஏற்பட்ட எதிர்பாராத மாற்றத்தால் விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
“விபத்துக்கான காரணங்களாக கூறப்பட்ட இயந்திரக் கோளாறு, சதிவேலை, அலட்சிய போக்கு போன்றவற்றை விசாரணை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. விபத்து நடந்த பள்ளத்தாக்கு பகுதியின் வானிலையில் ஏற்பட்ட எதிர்பாராத மாற்றத்தால், மேகங்களுக்குள் விமானம் நுழைந்துள்ளது. அதனால், பாதையை கணிக்க முடியாமல் விமானி திணறியுள்ளார். அதன் விளைவாக இவ்விபத்து ஏற்பட்டுள்ளது” என்று விளக்கப்பட்டுள்ளது.
ஆயுதங்களை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என்பதில் பிபின் ராவத் உறுதியாக இருந்தார் – பசவராஜ் பொம்மை
இக்கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், விசாரணை நீதிமன்றம் சில பரிந்துரைகளை வழங்கியுள்ளது என்றும் அவற்றை மதிப்பாய்வு செய்து வருகிறோம் என்றும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
மேலும், விபத்திற்கான முழுமையான காரணத்தை கண்டறிய, விமான தரவு பதிவு கருவி (ஃப்ளைட் டேடா ரெக்கார்டர்), காக்பிட் குரல் பதிவு கருவி (காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர்) போன்ற அனைத்து சாட்சிகளையும் விசாரணைக் குழு ஆய்வு செய்து வருகின்றது இந்திய விமானப்படை தனது அறிக்கையில் கூறியுள்ளது.
Source: The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.