கடந்த ஆண்டு வடகிழக்கு டெல்லியில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, எதிரான போராட்டத்தை விமர்சித்ததில் எந்த மனவருத்தமும் இல்லை, தேவைப்பட்டால் மீண்டும் அதைச் செய்வேன் என, பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கபில் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
”டெல்லி ரயாட்ஸ் 2020 : தி அன்டோல்ட் ஸ்டோரி” என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கபில் மிஸ்ரா, ”எப்போதெல்லாம் சாலைகள் முடக்கப்பட்டு, மக்கள் வேலைக்குச் செல்வதோ அல்லது குழந்தைகள் பள்ளி செல்வதோ தடை படுகிறதோ, அப்போதெல்லாம் அதைத் தடுக்க ஒரு கபில் மிஸ்ரா இருப்பான்” என கூறியுள்ளார்.
”தினேஷ் காதிக், அங்கித் சர்மா (கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள்) மற்றும் பலரின் உயிர்களை, என்னால் காப்பாற்ற முடியாததை, தவிர எனக்கு வேறும் வருத்தம் இல்லை. தேவைப்பட்டால் மீண்டும் அவ்வாறு பேசுவேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
டிராக்டர் பேரணி வன்முறை : இரவோடு இரவாக கைது செய்யப்பட்ட காஷ்மீர் விவசாய சங்க தலைவர்
குடியரசு தினத்தன்று, நடைபெற்ற வன்முறை தொடர்பாக பேசிய கபில் மிஸ்ரா, “பிரதர்ஷன் சே டங்கா தக் (ஆர்ப்பாட்டம் முதல் கலவரம் வரை) மாதிரி மிகவும் தெளிவாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
பிப்ரவரி 23, 2020 ஆம் தேதி, கபில் மிஸ்ரா “டெல்லியின் ஜாபராபாத் பகுதியில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை, அந்த இடத்தை விட்டு அகற்றுங்கள்” என்று எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசினார்.
” பெட்ரோல் விலை மாநிலங்களுடன் முடிவு, சோசலிசம் இறக்குமதி சித்தாந்தம் ” – நிர்மலா சீதாராமன்
53 பேர்கள் உயிரிழந்தது மற்றும் பலர் படுகாயமடைந்ததற்கு காரணமான அந்த வகுப்புவாத மோதலுக்கு, கபில் மிஸ்ராவின் இந்தப் பேச்சு, ஒரு தூண்டுதலாக அமைந்தது என பலரால் குற்றம்சாட்டப்பட்டது.
டெல்லி கலவரத்திற்கு கபில் மிஸ்ராவின் பேச்சு காரணமில்லை என, டெல்லி காவல்துறை மறுத்துள்ள நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியான டெல்லி சிறுபான்மை ஆணையத்தின் அறிக்கையில், கபில் மிஸ்ரா பேசிய பிறகே கலவரம் வெடித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.