Aran Sei

பல்கலைக்கழக வேந்தராக ஆளுநருக்கு பதில் முதலமைச்சரை நியமிக்கும் சட்ட மசோதா: மேற்குவங்க அமைச்சரவை ஒப்புதல்

ரசு நடத்தும் பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநருக்கு பதில் முதலமைச்சரை நியமிக்கும் சட்ட மசோதா விரைவில் மேற்கு வங்க சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று மாநில கல்வி அமைச்சர் பிராத்யா பாசு வியாழக்கிழமை தெரிவித்தார்.

ஆளுநருக்கு பதிலாக அனைத்து அரசு நடத்தும் பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வரை நியமிக்கும் சட்டத்திற்கு இன்று மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முன்மொழிவு விரைவில் சட்டமன்றத்தில் ஒரு மசோதாவாக அறிமுகப்படுத்தப்படும்” என்று பிராத்யா பாசு கூறினார்.

ஆளுநர் ஒத்துழைக்காவிட்டால் பல்கலைக் கழங்களுக்கு முதலமைச்சரை வேந்தராக அறிவிப்போம் – மேற்கு வங்க கல்வி அமைச்சர்

மேற்குவங்கத்தில் அரசு நடத்தும் பல்கலைக்கழகங்களின் வேந்தராக தற்போது ஆளுநர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்கத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்திற்கும் ஆளுருக்கு பதிலாக முதலமைச்சரை வேந்தராக நியமிப்பது குறித்து ஆலோசித்துவருவதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் பிரத்யா பாசு கடந்தாண்டு டிசம்பர் 25 ஆம் தேதி தெரிவித்திருந்தார்.

ஆளுநருக்கு அனுப்பப்படும் கோப்புகள் மீது அவர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தும் போக்கு நீடிக்கிறது. இது இப்படியே தொடர்ந்தால், கேராளவில் நடந்ததுபோல், மேற்குவங்கத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழங்களுக்கும் முதலமைச்சரே வேந்தராக நியமிக்கப்படுவார் என்று பிரத்யா பாசு அப்போது தெரிவித்திருந்தார்.

Source : newindianexpress

Nenjukku Needhi I கை கொடுத்தா தீட்டு, கை கொடுக்க கூடாது I VCK Sanga Tamizhan I Jamadagni

பல்கலைக்கழக வேந்தராக ஆளுநருக்கு பதில் முதலமைச்சரை நியமிக்கும் சட்ட மசோதா: மேற்குவங்க அமைச்சரவை ஒப்புதல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்