Aran Sei

இஸ்லாமோபோபியாவுக்கு எதிராக சமூகத்தை ஒன்றிணைக்க 1000 நல்லெண்ண மாநாடுகள் நடத்தப் போகிறோம்: ஜாமியத் உலமா ஐ ஹிந்த் தகவல்

ஸ்லாமோபோபியாவிற்கு எதிராக ஐக்கியப்படுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஜாமியத் உலமா ஐ ஹிந்த் ஏற்பாடு செய்திருந்த இரண்டு நாள் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா முடிவதிலுமிருந்து உலமாக்களும் மதகுருமார்களும் கலந்து கொண்டனர்.

அகண்ட பாரதம் பற்றிப் பாஜக பேசுகிறது. மேலும் இஸ்லாமிய வெறுப்பைத் தூண்டுபவர்களை பாஜக அரசு ஆதரிக்கிறது. அதனால் இஸ்லாமியர்கள் இந்தியாவில் சுதந்திரமாக நடமாடுவது கடினமாகிவிட்டது என்று ஜாமியத் உலமா ஐ ஹிந்த் தெரிவித்துள்ளது.

இஸ்லாமோபோபியாவுக்கு எதிராக சமூகத்தை ஒன்றிணைக்க 1000 நல்லெண்ண மாநாடுகள் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக ஜாமியத் உலமா ஐ ஹிந்த் தெரிவித்துள்ளது.

இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பைப் பரப்புபவர்களை பாஜக அரசு பாதுகாக்கிறது: ஜாமியத் உலமா ஐ ஹிந்த் கண்டனம்

ஜாமியத் உலாம் ஐ ஹிந்த் அமைப்பின் இரண்டு நாள் சபை தியோபந்தில் உள்ள ஈத்கா மைதானத்தில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து கிட்டத்தட்ட 2000 த்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு ஜாமியத் உலமா ஐ ஹிந்த் தலைவர் மெளலானா மஹ்மூத் ஆசாத் மதானி தலைமை தாங்கினார்.

இந்த மாநாட்டில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை

1. வன்முறையைத் தூண்டுவோரைத் தண்டிப்பதற்குத் தனிச் சட்டமொன்றை இயற்றுவதற்கான ஏற்பாடுகளைப் பரிந்துரைக்கும் சட்ட ஆணைக்குழுவின் 267 ஆவது அறிக்கையின் சிபாரிசுக்கு இணங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தாஜ்மஹாலின் கீழ் பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழை பாஜக தேடுகிறது – ஓவைசி கிண்டல்

2. மத நம்பிக்கைகளிடையே சகிப்புத்தன்மை, அமைதி மற்றும் சகவாழ்வை ஊக்குவிக்கும் பொருட்டு, ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்டபடி, மார்ச் 15 ஆம் தேதி இஸ்லாமோபோபியாவுக்கு எதிரான நாளாக அனுசரிக்கப்பட வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் அனைத்து வகையான இனவாதம் மற்றும் மத பாகுபாடுகளை ஒழிப்பதற்கான அர்ப்பணிப்பு நினைவுகூரப்பட வேண்டும்

3. நீதி மற்றும் ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடுவதற்காக இந்திய இஸ்லாமியர்களுக்கான நீதி மற்றும் அதிகாரமளித்தல் முன்முயற்சி என்ற ஒரு துறை ஜாமியத் உலமா ஐ ஹிந்த் அமைப்பால் உருவாக்கப்படும்.

இந்த மாநாட்டில், 11 உறுப்பினர்களைக் கொண்ட “ஜாமியத் சத்பவ்னா மஞ்ச்” என்ற அமைப்பு ஒன்றை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. அதன் உறுப்பினர்களில் பாதிப்பேர் இஸ்லாமியர் அல்லாதவர்களாக இருப்பார்கள். இந்த மன்றம் ஒவ்வொரு மாதமும் ஒரு கூட்டத்தைக் கூட்டி இஸ்லாமியரல்லாத சகோதரர்களின் பங்கேற்பை உறுதி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : newindianexpress

Defamation Case போட்டு Annamalai ய Court க்கு இழுக்கனும் Vanchi Nathan

இஸ்லாமோபோபியாவுக்கு எதிராக சமூகத்தை ஒன்றிணைக்க 1000 நல்லெண்ண மாநாடுகள் நடத்தப் போகிறோம்: ஜாமியத் உலமா ஐ ஹிந்த் தகவல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்