Aran Sei

விவசாயச் சட்டங்களை ரத்து செய்யக் கோரி மோடிக்கு தினமும் 1 லட்சம் மெசேஜ்கள் – உத்தர பிரதேச விவசாய தலைவர்

Image Credit : indianexpress.com

மூன்று விவசாயச் சட்டங்களை ரத்து செய்து, குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும்படி போராடும் விவசாயிகள் தினமும் பிரதமர் மோடிக்கு அது தொடர்பான மெசேஜ்களை அனுப்புவார்கள் என்று ராஷ்ட்ரிய கிசான் மஜ்தூர் சங்கதன் (RKMS) என்ற விவசாயிகள் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் வி.எம். சிங் கூறியுள்ளார்.

மத்திய அரசின் மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராகவும் வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும்படி சட்டம் இயற்றவும் கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் கடந்த 3 மாதங்களாக போராடி வருகின்றன.

‘கைதுகள், வழக்குகள், நோட்டீசுகள் – எங்களை பின்னோக்கி இழுக்காது’ : போராடும் விவசாயிகள் உறுதி

சென்ற மாதம் 26-ம் தேதி விவசாயிகளின் குடியரசு தின டிராக்டர் பேரணியின் போது ஒரு சிறு பகுதியில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ராஷ்ட்ரிய கிசான் மஜ்தூர் சங்கதன் டெல்லி எல்லையில் நடக்கும் போராட்டத்துக்கு தனது ஆதரவை விலக்கிக் கொண்டது.

இருப்பினும், டெல்லி எல்லையிலும், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் விவசாயிகளின் மகா பஞ்சாயத்துகள் மூலமும் போராட்டம் தொடர்கிறது.

விவசாயிகளின் குடியரசு தின பேரணியில் நடந்தது என்ன? – ஊடகங்களின் பிரச்சாரம் உண்மையா?

கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று, 21 பிற விவசாய சங்கங்களுடன் இணைந்து உத்தரபிரதேச கிசான் மஜ்தூர் மோர்ச்சா என்ற கூட்டமைப்பை அது உருவாக்கியிருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.

“தினமும், உத்தரபிரதேசத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் 5 விவசாயிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் இருப்பார்கள். மதியம் 3 மணிக்கு, தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு புதிய விவசாயச் சட்டங்கள் தொடர்பான தமது குறைகளை வெளிப்படுத்தும் வகையில் பிரதமர் மோடிக்கான 2 நிமிட மெசேஜ்களை பதிவு செய்வார்கள். இந்த மெசேஜ்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்” என்று டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் வி எம் சிங் தெரிவித்துள்ளார்.

“ஒவ்வொரு கிராமத்தையும் சேர்ந்த விவசாயிகளுக்கு அவர்களது கோதுமை பயிருக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கும் வரை இது தொடரும்” என்று அவர் அறிவித்துள்ளார்.

வடமாநிலங்களில் பரவும் போராடும் விவசாயிகளின் மகாபஞ்சாயத்துகள்

உத்தர பிரதேசத்தில் 65,000 பஞ்சாயத்துகள் உள்ளன, அவர்களில் 20,000 கிராமங்கள் பங்கேற்றால் கூட பிரதமருக்கு தினமும் 1 லட்சம் மெசேஜ்கள் அனுப்பப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

“20,000 கிராமங்கள் பங்கேற்றாலே ஒரு மாதத்துக்கு 30 லட்சம் மெசேஜ்கள் அனுப்பப்படும். 50,000 கிராமங்கள் பங்கேற்கும் போது என்ன நடக்கும்? கிராமங்களில் இருந்து வரும் இந்த மெசேஜ்களும் விவசாயிகளிடமிருந்து இல்லை என்று பிரதமர் மோடி சொல்வாரா” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த இயக்கத்தை வெற்றிகரமாக தொடரவும், விவசாயிகளுக்கிடையே சகோதரத்துவத்தை வளர்க்கவும் ஒரு கிராமத்தின் ஒவ்வொரு குடும்பமும் ஒரு கைப்பிடி தானியத்தை நன்கொடையாக தரும்படி கேட்டுக் கொள்ளப்படுவார்கள். இதை பயன்படுத்தி வாரம் ஒரு முறை ‘லங்கர்’ தயாரிக்கப்படும் என்றும் வி எம் சிங் கூறியுள்ளார்.

விவசாயச் சட்டங்களை ரத்து செய்யக் கோரி மோடிக்கு தினமும் 1 லட்சம் மெசேஜ்கள் – உத்தர பிரதேச விவசாய தலைவர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்