Aran Sei

கொலிஜியம் முறையில் அல்லாமல் ஒன்றிய அரசே நீதிபதிகளை நியமனம் செய்ய வேண்டும் – ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ

கொலிஜியம் முறையில் நீதிபதிகள் நியமிக்கப்படுவதை மக்கள் விரும்பவில்லை. நீதிபதிகளை நியமிப்பது ஒன்றிய அரசின் வேலை என்று ஒன்றிய அரசின் சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

இந்திய நீதித்துறையில் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளை தேர்ந்தெடுப்பதற்காக கொலிஜியம் முறை பின்பற்றப்படுகிறது. கொலிஜியம் என்பது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் மூத்த நீதிபதிகள் 4 பேர் கொண்ட குழுவாகும். இந்த குழு உச்சநீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளை தேர்ந்தெடுப்பது, நீதிபதிகளை இடமாற்றம் செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொலிஜியம் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் ஒன்றிய அரசின் சட்ட அமைச்சகம் நீதிபதிகள் நியமன அறிவிப்பை வெளியிட்டு அதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் அளிப்பார்.

நீதிபதிகளை பரிந்துரைக்கும் உச்ச நீதிமன்ற கொலிஜியம்: தனக்கு விருப்பமான நீதிபதிகளை மட்டும் தேர்ந்தெடுக்கும் ஒன்றிய அரசு

இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஆர்எஸ்எஸ் வெளியிட்டு வரும் வாரப் பத்திரிக்கையான ‘பஞ்சன்யா’ சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் ஒன்றிய அரசின் சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பங்கேற்றார்.

அந்நிகழ்வில் பேசிய அவர், “1993-ம் ஆண்டு வரை இந்தியாவில் அனைத்து நீதிபதிகளும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் ஆலோசனை நடத்தி ஒன்றிய அரசின் சட்ட அமைச்சகம் நியமித்து வந்தது. அந்த நேரத்தில் நாம் மிகச்சிறந்த நீதிபதிகளை கொண்டிருந்தோம்.

இந்த விவகாரத்தில் அரசியலமைப்பு தெளிவாக உள்ளது. நீதிபதிகளை நாட்டின் குடியரசுத் தலைவர் நியமிக்க வேண்டும். அப்படியென்றால் தலைமை நீதிபதியுடன் ஆலோசனை நடத்திய ஒன்றிய அரசின் சட்ட அமைச்சகம் நீதிபதிகளை நியமிக்க வேண்டும்.

‘நீதிபதிகள் நியமனத்தில் அரசியல் தலையீடு; கொலிஜியம் முறையை மாற்ற வேண்டும்’ – திருமாவளவன்

சட்ட அமைச்சகத்துடனான கலந்தாலோசனையை சம்மதமாக (இணக்கம்) 1993-ம் ஆண்டு உச்சநீதிமனம் தெரிவித்தது. நீதிமன்ற நியமனங்களை தவிர மற்ற எந்த துறையிலும் கலந்தாலோசனையை சம்மதமாக (இணக்கம்) வரையறுக்கப்படவில்லை.

கொலிஜியம் முறையில் நீதிபதிகள் நியமனத்தை நாட்டு மக்கள் விரும்பவில்லை என்பது எனக்கு தெரியும். அரசியலமைப்பு ஆன்மாவோடு நாம் செல்லும்போது, நீதிபதிகளை நியமிப்பது அரசின் வேலை. நீதிபதிகள் தங்கள் சகோதரர்களையே நீதிபதிகளாக நியமிப்பது இந்தியாவை தவிர உலகின் எந்த நாட்டிலும் நடைபெறுவதில்லை.

சட்டத்துறை அமைச்சராக நான் கவனிக்கும்போது, நீதிபதிகள் பாதி நேரம், மனதில் அடுத்த நீதிபதி யார் என்று முடிவெடுக்கும் ஆர்வத்தில் உள்ளனர். நீதிபதிகளின் முதன்மை பணி நீதி வழங்குவது, ஆனால், இந்த கொலிஜியம் நடைமுறையால் நீதிபதிகளின் பணிகள் பாதிக்கப்படுகிறது.

தன்பாலின் ஈர்பாளரான சவுரப் கிர்பால் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் – உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்

நீதிபதிகளை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு முறை தீவிரமாக உள்ளது, இதை கூறுவதற்கு வருந்துகிறேன். ஆனால், அங்கு குழுவாதம் உருவாகுகிறது. தலைவர்கள் மத்தியில் அரசியல் உள்ளதை மக்கள் பார்க்கின்றனர். ஆனால், நீதித்துறையிலும் அரசியல் நடைபெறுகிறது என்பது அவர்களுக்கு தெரியவில்லை.

மற்ற நீதிபதிகளை தேர்வு செய்யும் நடைமுறையில் தலையிடாமல் இருந்தால் நீதிபதி விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர். ஆனால், நீதிபதி நிர்வாக வேலைகளில் தலையிட்டால் அவரும் விமர்சனத்திற்கு உட்பட்டவரே’ என்று சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

Source : newindianexpress

வள்ளுவர் சங்கியா? கூகுள்ல தேடி பாருங்க | பூமர் அங்கிளாக மாறிய சங்கி கண்ணன் | Aransei Roast

கொலிஜியம் முறையில் அல்லாமல் ஒன்றிய அரசே நீதிபதிகளை நியமனம் செய்ய வேண்டும் – ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்