Aran Sei

பெகாசிஸால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து அதிகாரிகள் இந்தியாவில் இருந்து குறிவைக்கப்பட்டிருக்கலாம் – சிட்டிசன் ஆய்வகம் சந்தேகம்

Credit: The Wire

பெகாசிஸால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து அதிகாரிகள் இந்தியா உள்ளிட்ட நான்கு நாடுகளைச் சேர்ந்தவர்களால் குறிவைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக இணைய கண்காணிப்பு நிறுவனமான சிட்டிசன் ஆய்வகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தனிநபர்களின் செல்போனை வேவு பார்க்க இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஓ நிறுவனத்தால் பெகாசிஸ் என்கிற மென்பொருள் உருவாக்கப் பட்டுள்ளது. அரசு நிறுவனங்களால் மட்டுமே இந்த மென்பொருள் விற்கப்படுகிறது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெகாசிஸ் ஸ்பைவேரால் கண்காணிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் செயற்பாட்டாளர்கள் – ஆதாரங்கள் அம்பலம்

சிட்டிசன் ஆய்வகத்தின் கருத்தின்படி, ”2020, 2021 ஆண்டுகளில் இங்கிலாந்தின் பிரதமர் அலுவலகம், வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகங்கள் (எஃப்சிஓ) பெகாசிஸ் மென்பொருளால் தாக்கப்பட்டதற்கான அறிகுறிகள் இருப்பதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

“எஃப்சிஓவுடன் தொடர்புடைய பெகாசிஸ் தாக்குதல்கள் இந்தியா, சைப்ரஸ், ஜோர்டன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த பயன்பாட்டாளர்களுக்கு சொந்தமானது. இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தை இணைக்கும் தாக்குதல் ஐக்கிய அரபு அமீரகத்துடன் தொடர்புடையது” என்று சிட்டிசன் கூறியுள்ளது.

எல்கர் பரிஷாத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை கண்காணித்த பெகாசிஸ் ஸ்பைவேர் –  அம்னெஸ்டி இண்டர்நேஷனல் தொண்டு நிறுவனத்தின் ஆய்வில் நிரூபணம்

”இங்கிலாந்து வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகம் மற்றும் அதன் பிரிவான வெளிநாட்டு காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்திற்கு (எஃப்சிடிஓ) பல நாடுகளில் பணியாளர்களை கொண்டுள்ளது. பெகாசிஸால் வேவு பார்க்கப்பட்ட எஃப்சிஓ அதிகாரிகள் வெளிநாடுகளில் பணியில் உள்ளதால், அந்த நாட்டின் சிம் கார்ட்களை பயன்படுத்துகின்றனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில் உகாண்டாவில் அமெரிக்க வெளியுறவுதுறை ஊழியர்கள் பயன்படுத்திய வெளிநாட்டு செல்போன் எண்கள் ஹேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை சேர்ந்த 40 பத்திரிகையாளர்கள் வேவு பார்க்கப்பட்டனர் – சர்வதேச பத்திரிகைகள் நடத்திய புலன்விசாரணையில் அம்பலம்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவிற்கு வருவதற்கு சில நாட்களே உள்ள நிலையில், இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

Source: The Wire

பெகாசிஸால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து அதிகாரிகள் இந்தியாவில் இருந்து குறிவைக்கப்பட்டிருக்கலாம் – சிட்டிசன் ஆய்வகம் சந்தேகம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்