Aran Sei

ஒரு பையனை தோளில் சுமந்தபடி வெகு தூரம் நடக்க வைக்கப்பட்ட பெண் : மத்திய பிரதேசத்தில் கொடூரம்

த்திய பிரதேச மாநிலத்தில், பழங்குடியின பெண் ஒருவர் தன்னுடைய கணவரின் உறவினர் ஒருவரை தன் தோள்பட்டையில் சுமந்தபடி மூன்று கிலோமீட்டர் நடக்க வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டுள்ளதாக டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில், பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த தம்பதியர் தங்கள் இடையே இருந்த கருத்து மாறுபாட்டால் சுமூகமாக பிரிந்துள்ளனர். அந்த பெண் தனக்கு பிடித்த இன்னொரு ஆணுடன், அருகிலிருக்கும் மற்றொரு கிராமத்தில் தன் வாழ்க்கையை வாழ தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், அந்த பெண்ணுடைய முன்னாள் கணவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அந்த பெண்ணை அவரை வீட்டிலிருந்து பலவந்தமாக வெளியேற்றி அவரை அவமானப்படுத்தியுள்ளனர் என என்டிடிவியில் வெளியான செய்தி கூறுகிறது.

அதிகரிக்கும் பதின் வயது கருத்தரிப்பு – மத்திய அரசு அறிக்கை

அந்தப் பெண்ணை கொடூரமாக சித்திரவதை செய்த அந்த நபர்கள், அந்த பெண்ணினுடைய  கணவரின் குடும்ப உறுப்பினர் ஒருவரை தனது தோள்பட்டையில் சுமந்து கொண்டு 3 கிலோமீட்டருக்கு மேல் நடந்து செல்ல நிர்பந்தித்துள்ளனர்.

`பசுக்களுக்குத் தனி அமைச்சகம் அமைக்கப்படும்’ – மத்தியப் பிரதேசம்

இந்த மிரட்டல்களால் பயந்த அந்த பெண், அந்த பையனை தன் தோள்பட்டையில் சுமந்தபடி நடந்து செல்ல தொடங்கியுள்ளார். அவர் நடந்து செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.

அந்தப் பெண்ணை சுற்றியிருக்கும் ஆண்கள் (பெரும்பாலும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள்) கையில் கட்டைகளுடனும், மட்டைகளுடனும் அந்த பெண்ணை மிரட்டியபடி பின் தொடர்கின்றனர். அந்தப் பெண்ணை தொடர்ந்து கிண்டலும் கேலியும் செய்யும் ஆண்கள், இந்நிகழ்வை ரசித்து நடனம் ஆடவும் செய்கின்றனர்.

உத்திர பிரதேசத்தின் வழியில் மத்திய பிரதேசம் : மத சுதந்திர சட்டம் நிறைவேற்றம்

இந்தக் கொடூரமான சம்பவத்தில் ஈடுபட்டதாக, ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, அந்த பெண்ணின் முன்னாள் கணவன் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என என்டிடிவி செய்தி கூறுகிறது.

மத்திய பிரதேசம் – புதிய விவசாய சட்டங்களின் கீழ் விவசாயிகளை ஏமாற்றிய வர்த்தகர்கள்

மத்திய பிரதேசத்தில் இது போன்ற சம்பவம் நடப்பது முதன்முறை அல்ல, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடைய கணவரை பிடிக்காமல் வெளியேறி மற்றொரு ஆணுடன் வாழ்ந்து வந்த பெண், கடுமையாக தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு தன்னுடைய கணவரை தன் தோள்பட்டையில் வைத்து நடக்க வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பையனை தோளில் சுமந்தபடி வெகு தூரம் நடக்க வைக்கப்பட்ட பெண் : மத்திய பிரதேசத்தில் கொடூரம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்