Aran Sei

‘நம் போராட்டத்திற்காக ஒரு பயிரை தியாகம் செய்யுங்கள்’ – ஏர்கலப்பை புரட்சிக்கு போராடும் விவசாயிகள் அழைப்பு

விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை விவசாயிகள் வீடு திரும்பப் போவதில்லை என்றும் இப்போராட்டத்தைத் தொடர நீங்கள் ஒரு பயிரை தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்றும் நாட்டின் மொத்த விவசாயிகளையும் நோக்கி பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் கோரியுள்ளார்.

நேற்று (பிப்ரவரி 18), ஹரியானா மாநிலம் ஹிசாரில் உள்ள காரக் பூனியா கிராமத்தில் நடந்த விவசாயிகளின் மகாபஞ்சாயத்தில், ராகேஷ் திகாயத் பங்கேற்று உரையாற்றியுள்ளார்.

அமைதியான முறையில் நடைபெற்ற விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டம் – நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆதரவு

அப்போது, “பயிர்களை (கோதுமை) அறுவடை செய்யும் காலம் வரும்போது, விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு விட்டு தங்கள் கிராமங்களுக்கே திரும்பி சென்று விடுவார்கள் என்று மத்திய அரசு கூறுகிறது. அதை பொய்யாக்க வேண்டும். தேவைப்படுமேயானால், நீங்கள் உங்களின் ஒரு பயிரை இப்போராட்டத்திற்காக தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும். இதற்கு உங்கள் பயிர்களுடன் தயாராகுங்கள்.” என்று அவர் கோரியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், “அடுத்தகட்ட போராட்டத்திற்கான அழைப்புக்கு விவசாயிகள் தயாராக இருக்க வேண்டும். உங்கள் டிராக்டர்களில் எரிபொருள் நிரப்பி வையுங்கள்.  டெல்லியை நோக்கி படையெடுக்க தயாராகுங்கள். நீங்கள் எந்த நேரத்திலும் டெல்லிக்கு அழைக்கப்படலாம். இந்த முறை ஹால் கிராந்தி (ஏர் கலப்பை புரட்சி) நடத்துவோம். அதில், வயல்களில் பயன்படுத்தப்படும் பொருட்களை விவசாயிகள் எடுத்து வருவார்கள்.” என்று ராகேஷ் திகாயத் கூறியுள்ளார்.

விரைவில் மேற்கு வங்கம், கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளிலும் மகாபஞ்சாயத்துகள் நடத்தப்படும் என்று அவர் தகவலளித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

‘நம் போராட்டத்திற்காக ஒரு பயிரை தியாகம் செய்யுங்கள்’ – ஏர்கலப்பை புரட்சிக்கு போராடும் விவசாயிகள் அழைப்பு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்