Aran Sei

காஷ்மீர் பண்டிட்களுக்கு மகாராஷ்டிரா அரசு உறுதியாக நிற்கிறது – மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்ரே

Credit: NDTV

காஷ்மீர் பண்டிட்களுக்கு பின்னால் மகாராஷ்டிரா உறுதியாக நிற்கிறது, அவர்களுக்கு உதவ முடிந்த அனைத்தையும் மகாராஷ்டிரா அரசு  செய்யும் என்று அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்ரே தெரிவித்துள்ளார்.

”கடந்த சில நாட்களாக, காஷ்மீர் பள்ளத்தாக்கில் காஷ்மீர் பண்டிட்கள் மற்றும் இந்துக்கள் குறிவைத்து கொலை செய்வது நடந்து வருகிறது. ஒரு மாதத்திற்குள், ஒன்பது காஷ்மீர் பண்டிட்கள் படுகொலை செய்யப்பட்டனர். தாக்குதல்களால் அச்சமடைந்த அவர்கள், காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து அவர்கள் வெளியேறத் தொடங்கியுள்ளனர். முழு நாடும் சீற்றமடைந்துள்ளது.” என்று அவர் கூறியுள்ளார்.

பள்ளத்தாக்கின் நிலைமைகுறித்து கடுமையான கவலையை உத்தவ் தாக்கரே வெளிப்படுத்தியுள்ளார்.

காஷ்மீர்: பண்டிட்கள் மீதான தொடர் தாக்குதல் – இஸ்லாமியத் தலைவர்கள், சிவில் உரிமைகள் அமைப்பு கண்டனம் 

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து காஷ்மீர் பண்டிட்கள் உண்மையில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ள அவர், ” அவர்கள் வீட்டிற்குத் திரும்புவதற்கான  கனவுகளைக் காட்டினர். ஆனால், அவர்கள் வீடு திரும்பியவுடன், பண்டிட்கள் பிடிக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள். இந்த கொடூரமான சூழ்நிலையில், ஏராளமான பண்டிதர்கள் வெளியேறத் தொங்கினர். இது ஒரு அதிர்ச்சியூட்டும் மற்றும் குழப்பமான நிகழ்வாகும்” என்று தாக்கரே கூறியுள்ளார்.

”மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் என்ற முறையில், இந்த கடினமான காலங்களில் காஷ்மீர் பண்டிட்கள் பின்னால், மகாராஷ்டிரா அரசு உறுதியாக நிற்கும் என்று என்னால் உறுதியளிக்க முடியும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

1995 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் சிவசேனா அரசாங்கம் அமைக்கப்பட்டபோது, சிவசேனா தலைவர் பாலாசாகேப் தாக்கரே, மகாராஷ்டிராவில் உள்ள காஷ்மீர் பண்டிட்களின் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கினார்.

காஷ்மீர்: குறிவைக்கப்பட்ட தாக்குதல்களை கையாள ஒன்றிய அரசு பயன்படத்திய திட்டம் தோல்வி – சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல்

காஷ்மீர் பண்டிட்களின் பாதுகாப்புக்காக சிவசேனா தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது என்று குறிப்பிட்ட உத்தவ் தாக்கரே, “மகாராஷ்டிரா எப்போதும் காஷ்மீர் பண்டிட்களுடன் ஒரு உணர்வுப்பூர்வமான உறவைப் பேணி வருகிறது” என்று கூறியுள்ளார்.

”நாங்கள் அதை எங்கள் கடமையாக கருதுகிறோம். கடமை உணர்வுடன் அதைப் பார்க்கிறோம். நாங்கள் தற்போது பள்ளத்தாக்கின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். காஷ்மீர் பண்டிட்களின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. காஷ்மீர் பண்டிட்களுக்கு இயன்ற அனைத்தையும் செய்வோம் என்று நான் மீண்டும் கூறுகிறேன். அவர்கள் தடுமாற்றத்தில் விடமாட்டார்கள். மகாராஷ்டிரா தனது கடமையைச் செய்யும்” என்று உத்தவ் தாக்ரே உறுதியளித்துள்ளார்.

இதற்கிடையில், ஜம்மு காஷ்மீரின் நிலைமைகுறித்து கவலை தெரிவித்துள்ள மகாராஷ்டிரா அமைச்சர் ஆதித்யா தாக்கரே, காஷ்மீர் பள்ளத்தாக்கில் சமீபத்தில் நடைபெற்று வரும் இலக்கு வைக்கப்பட்ட கொலைகள் ஆழ்ந்த் கவலையளிக்கிறது என்று கூறியுள்ளார்.

இடமாறுதல் கோரிக்கையை ஏற்க மறுத்த ஒன்றிய அரசு – காஷ்மீர் பள்ளதாக்கை விட்டு வெளியேறும் பண்டிட்கள்

காஷ்மீர் பண்டிட்களுக்காக மகாராஷ்டிராவின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பண்டிட்கள் மட்டும் இந்துக்கள் கொல்லப்படுவது குறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ஆதித்யா தாக்கரே, “காஷ்மீர் நிலைமை ஆழ்ந்த கவலையளிக்கிறது. நிலைமை மீண்டும் மீண்டும் வருவது துரதிருஷ்டமானது. அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய அரசு வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். என்று நாங்கள் எதிர்பாக்கிறோம்” அவர் கூறியுள்ளார்.

Source: NDTV

உச்சகட்டத்தில் அதிமுக பாஜக மோதல்! கூட்டணி உடைகிறதா? Manoj Interview | Admk Vs Bjp | Sellur Raju ADMK

காஷ்மீர் பண்டிட்களுக்கு மகாராஷ்டிரா அரசு உறுதியாக நிற்கிறது – மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்ரே

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்