தி வயர் இணையதளத்தின் நிறுவன ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், தி வயர் மற்றும் அதன் செய்தியாளர் இஸ்மத் அராவின் பெயகள் சேர்க்கப்பட்டு இருப்பதாகத் தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
குடியரசு தினத்தன்று உயிரிழந்த விவசாயி குடும்பத்தினர் கூறிய கருத்துகளை ட்விட்டரில் பதிவிட்டு இருந்ததாகச் சித்தார்த் வரதராஜன் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு இருந்த நிலையில், ஜனவரி 30 ஆம் தேதி அச்செய்தி தொடர்பாக கட்டுரை எழுதிய இஷ்மத் ஆரா, அதை பிரசுதிரித்த தி வயர் இணையதளம் மீதும் உத்திரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தின் சிவில் லைன்ஸ் காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராம்பூரை சேர்ந்த சஞ்சு துரா கொடுத்த புகாரின் அடிப்படிடையில் முதல் வழக்கு பதியப்பட்டு இருந்த நிலையில், அதில் ஆராவின் பெயரைச் சேர்க்குமாறு சாகுப் ஹூசன் என்பவர் புகார் கொடுத்திருந்ததாக, தி வயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
மியான்மர் இராணுவப் புரட்சி – ஆட்சிகள் மாறியும் காட்சிகள் மாறவில்லை
ராம்பூர் மாவட்ட காவல்துறை உதவி கண்காணிப்பாளர் சன்சார் சிங், ”விசாரணையின்போது கட்டுரையை எழுதிய இஸ்மத் ஆராவின் பெயரும், அதைப் பிரசுரித்த தி வயர் இணையதளம் பெயரும் வெளிச்சத்திற்கு வந்தது” எனத் தெரிவித்தார். உத்திரபிரதேச காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ராம்பூர் அரசு பொது மருத்துவமையின் பின்னால் இருக்கும் குடியிருக்கும் சர்தார் ஹுசைனின் மகன் சாகுப் ஹூசன், இது தொடர்பாகப் புகார் அளித்திருந்ததாகவும், அந்தப் புகாரும் இந்த முதல் தகவல் அறிக்கையில் இணைக்கப்பட்டு இருக்கிறது” எனக் கூறிப்பிடப்பட்டு இருப்பதாக, தி வயர் கூறியுள்ளது.
மத்திய பட்ஜெட் 2021 : ”இந்த நூற்றாண்டின் தலை சிறந்த பட்ஜெட்” – அதானி புகழாரம்
வரதராஜனின் ட்விட்டர் பதிவும் மற்றும் ஆராவின் கட்டுரையும், ”பொது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியிருப்பதோடு, பதற்றையும் எற்படுத்தியுள்ளது” எனப் புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்ததாகவும், வரதராஜனின் ட்விட்டிற்கு பதிலளித்த ராம்பூர் மாவட்ட நீதிபதி பதிவிட்ட ட்விட்டில் “உங்கள் பதிவு சட்டம் ஒழுங்குப் பிரச்னையை ஏற்படுத்தக்கூடும் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இது பதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது” எனப் பதிவிட்டிருந்ததாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hope you understand your story could cause law and order problem here. It has already caused tensed situation here. Responsibility?
— DM Rampur (@DeoRampur) January 30, 2021
டிராக்டர் பேரணியின்போது உயிரிழந்த நவ்ரீத் சிங், குண்டு காயத்தால் உயிரிழந்தாரென நவ்ரீத் சிங்கின் தாத்தா ஹர்தீப் சிங் கூறியதாக, சித்தார்த் வரதராஜன் தனது ட்விட்டர் பதிவிட்டதற்காக, ஜனவரி 31 ஆம் தேதி சித்தார்த் வரதராஜன் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகத் தி வயர் கூறியுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.