Aran Sei

இந்திய இலங்கை உறவு – கொழும்பு துறைமுக ஒப்பந்தத்தைத் தொடர்ந்து திரிகோணமலை சேமிப்பு டேங்குகள் ஒப்பந்தம் ரத்து

Image Credit : thewire.in

ந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு குத்தகைக்கு விடப்பட்ட 99 கச்சா எண்ணெய் சேமிப்பு டேங்குகளை திரும்பப் பெறுவதாக இலங்கை அறிவித்துள்ளது.

கொழும்பு துறைமுக ஒப்பந்தம் ரத்து – இலங்கை அரசு மீது வழக்கு தொடுப்பதை சாத்தியமற்றதாக்கிய மோடி அரசு

இலங்கையின் கிழக்கு துறைமுகமான திரிகோணமலையில், இந்த சேமிப்பு டேங்குகள் இந்தியாவின் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு 30 ஆண்டு குத்தகைக்குத் தரப்பட்டிருந்தன.

திரிகோணமலை துறைமுகம் உலகத்தின் மிக ஆழமான இயற்கை துறைமுகங்களில் ஒன்று. இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் அரசு இந்தத் துறைமுகத்தில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டருந்தது.

இரண்டாம் உலகப் போருக்கும் பின் இந்த சேமிப்பு டேங்குகள் பயன்படுத்தாமல் கைவிடப்பட்டிருந்தன. 2003-ம் ஆண்டில் அவை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு, ஆண்டுக்கு $1 லட்சம் கட்டணத்துக்கு, 30 ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டிருந்தன.

இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இலங்கை அரசின், பெட்ரோலியம் ஸ்டிரேஜ் நிறுவனத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷனின் தொழிற்சங்கங்கள் சேமிப்பு டேங்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வந்ததாக தி வயர் கூறுகிறது.

திரிகோணமலைக்கு அருகில் பயணிக்கும் கப்பல்களுக்கு தங்கும் வசதிகளை அளிப்பதற்கான திறனை இந்த சேமிப்பு டாங்குகள் கொண்டிருக்கும் என்று டெய்லி மிரர் செய்தித் தாள் கூறியுள்ளது.

இந்த சேமிப்பு டேங்குகளை இலங்கை திரும்பப் பெறுவது தொடர்பான பேச்சு வார்த்தைகள், இலங்கைக்கான இந்திய தூதருடன் கொழும்பில் நேற்று முடிவடைந்தது என்று இலங்கை எரிசக்தித் துறை அமைச்சர் உதயா கம்மன்பில்லா அறிவித்துள்ளார்.

“இந்திய தூதுவர் மிகவும் தாராளமாக நடந்து கொண்டார்” என்றும், “நமக்கு உதவும் வகையில் 2017-ல் போடப்பட்ட ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை அவர் வலியுறுத்தவில்லை” என்றும் உதயா கம்மன்பில்லா கூறியுள்ளார்.

“திரிகோணமலைக்கு அருகில் செல்லும் கப்பல்களில் பெரும்பாலானவை இந்திய கப்பல்கள், எனவே சந்தையை வெல்வதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு தேவையாக உள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு, இலங்கை ரத்து செய்யும் இந்தியாவுடனான இரண்டாவது ஒப்பந்தம் என்று தி வயர் செய்தி தெரிவிக்கிறது.

இலங்கை துறைமுகம் அதானியிடம் வழங்கப்படாது : தொழிற்சங்கங்களின் போராட்டத்திற்கு அடிபணிந்த இலங்கை அரசு

சென்ற மாதம், கொழும்பு இழக்கு கன்டெய்னர் முனைய வளர்ச்சிப் பணிகளை இந்தியாவுடனும், ஜப்பானுடனும் இணைந்து மேற்கொள்ளும் முத்தரப்பு ஒப்பந்ததை இலங்கை ரத்து செய்திருந்தது.

இந்திய இலங்கை உறவு – கொழும்பு துறைமுக ஒப்பந்தத்தைத் தொடர்ந்து திரிகோணமலை சேமிப்பு டேங்குகள் ஒப்பந்தம் ரத்து

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்