Aran Sei

’கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத பெட்ரோல், டீசல் விலை உயர்வு’ – சோனியா காந்தி கண்டனம்

டந்த ஆறரை ஆண்டுகளில் மத்திய அரசு பெட்ரோல், டீசல்  மீதான உற்பத்தி வரியை உயர்த்தியதன் வழியாக, ரூ.19 லட்சம் கோடி லாபம் ஈட்டியுள்ளது என்றும் கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளது என்றும் மத்திய அரசை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி  விமர்சித்துள்ளார்.

இது குறித்து, சோனியா காந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசு, கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பையும், நாட்டில் நிலவும் பேரிடரான சூழலையும் வாய்ப்பாகப் பயன்படுத்தி தனது கஜானாவை நிரப்பிக்கொள்ள நினைக்கிறது.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

சிலிண்டர் விலை உயர்வு : ஏழை வயிற்றிலடிக்கும் மத்திய அரசு – திருமாவளவன் குற்றச்சாட்டு

நாடு விடுதலை பெற்றதில் இருந்து முதல் முறையாக முக்கியமான முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது என்றும் ஒருபுறம் நாட்டிற்கு உணவு வழங்கும் விவசாயிகள் நியாயமான தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 44 நாட்களாக டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகிறார்கள் என்றும் அவர் நினைவுப்படுத்தியுள்ளார்.

அதே நேரத்தில், சர்வாதிகாரப் போக்கு கொண்ட, உணர்வில்லாத, இரக்கமில்லாத பாஜக அரசு, ஏழை மக்களின் முதுகெலும்பையும், நடுத்தர மக்களின் முதுகெலும்பையும் உடைப்பதில் பரபரப்பாக இருக்கிறது என்று சோனியா காந்தி விமர்சித்துள்ளார்.

தொடரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு – அச்சத்தில் வாகன ஓட்டிகள்

மேலும், “கடந்த ஆறரை ஆண்டுகளில் மோடி தலைமையிலான அரசு, பெட்ரோல் மற்றும் டீசலில் உற்பத்தி வரியை உயர்த்தியதன் மூலம் ரூ.19 லட்சம் கோடி ஈட்டியுள்ளது. இன்று பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலையானது பேரலுக்கு 50.96 டாலராகத்தான் இருக்கிறது. அதாவது லிட்டர் ரூ.23.43 ஆக குறைந்தபோதிலும்கூட, டீசல் விலை ரூ.74.38 ஆகவும், பெட்ரோல்  விலை ரூ.84.20 ஆகவும் உயர்ந்துள்ளது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 73 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்வில் இதுதான் அதிகபட்சமாகும் என்றும் “சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தாலும், மக்களுக்கு நன்மை கிடைப்பதற்குப் பதிலாக உற்பத்தி வரியை உயர்த்தி லாபம் ஈட்டுவதிலேயே மத்திய அரசு நோக்கமாக கொண்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டின் பட்ஜெட்டையும் பாதிக்கிறது.” என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி  குற்றஞ்சாட்டியுள்ளார்.

’கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத பெட்ரோல், டீசல் விலை உயர்வு’ – சோனியா காந்தி கண்டனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்