Aran Sei

” சிறு பிரிவு விவசாயிகள் மட்டும் போராடுகிறார்கள் ” – பிரிட்டிஷ் எம்பிக்கு இந்திய தூதரகம் கடிதம்

Image Credit : thehindu.com

ந்தியாவில் மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் குறித்து லண்டனில் உள்ள ஐக்கிய முடியரசுக்கான (UK) இந்திய தூதரகம் விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது.

Image Credit : scroll.in
பிரிட்டிஷ் எம்பி கிளாடிய வெப் – Image Credit : scroll.in

பிரிட்டனின் லெஸ்டர் கிழக்கு தொகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கிளாடியா வெப் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக ட்வீட் செய்த சில மணி நேரங்களுக்குள் இந்த வெளிப்படையான கடிதத்தை இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளதாக scroll.in செய்தி தெரிவிக்கிறது.

‘விவசாயிகள் சோர்வடையமாட்டார்கள், 6.5 லட்சம் கிராமங்கள் உடன் நிற்கின்றன’ – ராஜஸ்தான் முதல்வர்

விவசாயிகளின் போராட்டம், “இந்தியாவின் விவசாய சமுதாயங்களின் ஒரு சிறு பிரிவினரால் நடத்தப்படுகிறது” என்று இந்திய தூதரகம் இந்தக் கடிதத்தில் கூறியுள்ளது. கிளாடிய வெப்-ன் தொகுதியைச் சேர்ந்தவர்கள் இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு இந்தச் சட்டங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அது கூறியுள்ளது.

ஜனநாயகமற்ற முறையில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன: திமுக எம்.பி சண்முகம்

“விவசாயச் சட்டங்கள் இந்திய நாடாளுமன்றத்தில் முறையாக விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன” என்றும், “அவற்றின் பலன்கள் 10 கோடிக்கும் அதிகமான சிறு விவசாயிகளுக்கு உடனடியாக சென்று சேர ஆரம்பித்து விட்டது” என்றும் அந்தக் கடிதம் கூறிக் கொள்கிறது. “இந்தச் சட்டங்களை திறனுடன் அமல்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் விவசாயிகளுடனும் தொடர்புள்ள பிறருடனும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றும் இந்திய தூதரகம் கூறியுள்ளது.

இந்த புதிய சட்டங்கள் விவசாயிகளை மட்டுமே பாதிக்கும் என்று நினைக்கிறீர்களா? – சாய்நாத்

போராடும் விவசாயிகளுக்கும், அரசுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைக்கு இடையூறு வகிக்கும் வகையிலான அன்னிய சதித் திட்டங்கள் குறித்தும் இந்தியா அறிந்திருக்கிறது என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டம் – கிரேட்டா துன்பெர்க் ஆதரவு, ரிஹான்னாவுக்கு கங்கனா பதில்

கிளாடியா வெப், சென்ற சனிக்கிழமை அன்று போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ட்வீட் செய்திருந்தார். அதில் “நான் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

மார்னிங் ஸ்டார் பத்திரிகையில் இது தொடர்பாக அவர் எழுதிய கட்டுரையின் படத்தையும் பகிர்ந்திருந்தார்.

தொழிலாளர், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட தலித் இளம் பெண் – காவல் நிலையத்தில் சித்திரவதை

இரண்டு நாட்களுக்குப் பிறகு, திங்கள் கிழமை அன்று தீஷா ரவி, நவ்தீப் கவுர் ஆகியோரின் கைதை கண்டித்து ட்வீட் செய்திருந்தார். அதில், “தீஷா ரவிக்கு வயது 21, அவர் ஒரு மாணவரும் பருவநிலை செயல்பாட்டாளரும் ஆவார். நவ்தீப் கவுருக்கு வயது 24, அவர் தொழிலாளரும் தொழிற்சங்க செயல்பாட்டளரும் ஆவார். இந்த இரண்டு பெண்களும், விவசாயிகளின் போராட்டத்தை அமைதியான வழியில் ஆதரித்ததற்காக குறி வைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டிருந்தார்.

“இந்த அடக்குமுறை எதேச்சதிகாரத்தாலும், சுதந்திரச் சந்தை முதலாளித்துவத்தாலும் தூண்டப்பட்டது. அமைதியாக இருக்காதீர்கள்!” என்றும் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

தேசதுரோக வழக்கு பதிவு செய்யும் அளவிற்கு, டூல்கிட்டில் எதுவும் இல்லை – முன்னாள் நீதிபதி கருத்து

நவ்தீப் கவுர் ஒரு மாதத்துக்கு மேலாக போலீஸ் காவலில் உள்ளார், தீஷா ரவி சென்ற ஞாயிற்றுக் கிழமை டெல்லி போலீசால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

” சிறு பிரிவு விவசாயிகள் மட்டும் போராடுகிறார்கள் ” – பிரிட்டிஷ் எம்பிக்கு இந்திய தூதரகம் கடிதம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்