பாகிஸ்தானில் இலங்கை பிரஜை அடித்து கொல்லப்பட்ட வழக்கில் 6 பேருக்கு தூக்கு தண்டனையும் 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், 67 பேருக்கு 2 ஆண்டுகள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 3 தேதி, பாகிஸ்தானின் சியால்கோட் மாவட்டத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் நுழைந்த 800 பேர் கொண்ட தெஹ்ரீக்-இ-லப்பைக் கட்சியின் ஆதரவாளர்கள், தொழிற்சாலையின் பொது மேலாளர் பிரியந்தா குமாரை (47) அடித்துக் கொன்று, அவரது உடலை எரித்தனர்.
இது தொடர்பான வழக்கை அந்நாட்டு தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் 4 மாதங்களாக விசாரித்து வந்தது.
தினசரி அடிப்படையில் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி நடாஷா நசீம், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6 பேருக்கு தூக்கு தண்டனை, 7 பேருக்கு ஆயுள் தண்டனை, 67 பேருக்கு கடுங்காவல் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு குற்றம்சாட்டப்பட்டுள்ள 9 சிறார்கள் மீதான விசாரணை நிறைவடையாத காரணத்தால், அவர்களுக்கான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டெல்லி: ஜஹாங்கிர்புரி வன்முறை – விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் மீது வழக்கு பதிந்த காவல்துறை
இந்த சம்பவம் பாகிஸ்தான் முழுவதும் பரவலான சீற்றமும் கண்டனமும் எழுந்தது. அரசியல்வாதிகள், அறிஞர்கள் மற்றும் குடிமை சமூக உறுப்பினர்கள் குற்றவாளிகளுக்கு விரைவான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
Source: The Hindu
இசைஞானி இளையராஜா மீது கொட்டப்படும் சாதிய வன்மம் – முற்போக்குவாதிகளின் முகத்திரையைக் கிழிக்கிறார் எழுத்தாளர் கௌதம சன்னா
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.