Aran Sei

பஞ்சாபிற்கு நிதி நிறுத்தம் – ’கூட்டாட்சியை சீர்குலைத்து ஜனாதிபதி ஆட்சிக்கு வழி வகுக்கிறது பாஜக’ – அகாலி தளம்

ஞ்சாப் மாநிலத்திற்கு தர வேண்டிய ஊரக வளர்ச்சி நிதியை நிறுத்தி வைத்துள்ளதன் வழியாக கூட்டாட்சி என்ற கட்டமைப்பையே பாஜக அரசு சீர்குலைத்துவிட்டது என்று சிரோமணி அகாலிதளக் கட்சி குற்றச்சாட்டியுள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சிரோமணி அகாலிதளம் கட்சியானது, கடந்த செப்டம்பர் மாதம் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணியிலிருந்து விலகியது.

`கூட்டாட்சிக்கு எதிரானது’ – விவசாயச் சட்டங்களுக்கு எதிராக கிராமசபைகள் தீர்மானம்

அதைத் தொடர்ந்து, விவசாய சட்டங்கள் தொடர்பான செயற்பாடுகள் மட்டுமின்றி, மத்திய அரசின் பல செயற்பாடுகளையும் சிரோமணி அகாலிதளம் விமர்சித்து வருகிறது.

இந்நிலையில், நேற்று (ஜனவரி 21) சிரோன்மணி அகாலிதளக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரேம்சிங் சந்துமாஜ்ரா ஏஎன்ஐயிடம் பேட்டியளித்துள்ளார்.

மாநிலங்களவையில் அதிகரித்து வரும் பிராந்திய மொழிகளின் பயன்பாடு – இந்தி எதிர்ப்புதான் காரணமா?

அப்போது, “பஞ்சாப் மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்குடன் எங்களுக்கு அரசியல்ரீதியிலான கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால் மாநிலத்திற்கு வழங்கப்பட வேண்டிய ஊரக வளர்ச்சி நிதியை அளிக்காமல் மத்திய அரசு  நிறுத்தி வைத்திருப்பதை எங்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு மாநிலத்திற்கான ஊரக வளர்ச்சி நிதி  ஒதுக்கீட்டை நிறுத்தி வைத்திருப்பதை அரசியலமைப்பிற்கே விரோதமானது.” என்று அவர் விமர்சித்துள்ளார்.

நாம் எல்லோரும் ஓர் ஒற்றையாட்சியின் கீழ் வாழும் முறையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறோம் என்று எங்களுடைய கட்சி கருதுகிறது என்று குறிப்பிடும் பிரேம்சிங் சந்துமாஜ்ரா, “இது நாடாளுமன்ற அரசாங்க அமைப்பிலிருந்து ஜனாதிபதி வடிவிலான அரசாங்க அமைப்பை நோக்கி நகர்வதற்கான அறிகுறி. இது நல்ல முறையே அல்ல.” என்று எச்சரித்துள்ளார்.

’மத்திய அரசின் அதிகாரப்போக்கால், சோவியத் போல் இந்தியா சிதறும்’ – சிவசேனா எச்சரிக்கை

மேலும், பட்ஜெட்டில் பல்வேறு தலைப்பிலான அத்தியாவசிய செலவினங்களுக்கு செலவழிக்க மாநிலங்களை அனுமதிக்காததன் மூலம் கூட்டாட்சி என்ற கட்டமைப்பையே மத்தியில் ஆளும் பாஜக சீர்குலைத்து வருகிறது என்பதை எதிர்க்கட்சியினருக்கும் பாஜகவின் தோழமைக் கட்சிகளுக்கும் சிரோமணி அகாலிதளத் தலைவர்கள் சுட்டிக் காட்டி வருகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.

பஞ்சாபிற்கு நிதி நிறுத்தம் – ’கூட்டாட்சியை சீர்குலைத்து ஜனாதிபதி ஆட்சிக்கு வழி வகுக்கிறது பாஜக’ – அகாலி தளம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்