Aran Sei

விவசாயிகளை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும், பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் – விவசாய சங்கங்கள்

Image Credit : tribuneindia.com

கைது செய்யப்பட்ட போராடும் விவசாயிகளை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்றும், மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடர்பாக போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்-க்கு கடிதம் எழுதியுள்ளது.

மத்திய அரசின் மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராக லட்சக்கணக்கான விவசாயிகள், கடந்த மூன்று மாதங்களாக, டெல்லி எல்லைகளில் முற்றுகையிட்டு போராடி வருகின்றனர். சென்ற ஜனவரி 26 அன்று விவசாயிகளின் குடியரசு தின டிராக்டர் பேரணியின் போது ஒரு சிறு பகுதியில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து டெல்லி போலீஸ் பல வழக்குகளை பதிவு செய்து நூற்றுக்கணக்கான பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

‘நாடாளுமன்ற முற்றுகை; 40 லட்சம் டிராக்டர்கள்; இந்தியா கேட் பூங்காவில் உழவு’ : தீவிரமாக களமிறங்கும் விவசாயிகள்

“நூற்றுக்கணக்கான விவசாயிகளும் போராட்ட ஆதரவாளர்களும் இந்திய அரசாலும் பல மாநில அரசுகளாலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், அவர்களுக்கு எதிராக பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன” என்பதை சம்யுக்த கிசான் மோர்ச்சா சுட்டிக் காட்டியிருப்பதாக டிரிபியூன் இந்தியா வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.

பர்னாலாவில் கூடிய லட்சக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் – டெல்லி போலீசுக்கு எச்சரிக்கை

போராடும் விவசாய சங்கங்கள் நேற்று கடைப்பிடித்த “தமம் பிரதிரோத் திவஸ்” நாளை ஒட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளனர்.

சென்ற மாதம், டூல் கிட் வழக்கில் கைது செய்யப்பட்ட பருவநிலை செயல்பாட்டாளர் திஷா ரவி பிணையில் விடுவிக்கப்பட்டதை சம்யுக்த கிசான் மோர்ச்சா வரவேற்றுள்ளது.

திஷா ரவியின் துணிவு இந்தியாவின் மனசாட்சியை உலுக்கட்டும் – அபூர்வானந்த்

“பிணை உத்தரவில் நீதிபதி தர்மேந்தர் ராணா தெரிவித்துள்ள பல கருத்துக்களையும் எஸ்கேஎம் வரவேற்கிறது” என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

திஷா ரவியை சட்ட விரோதமாகவும், அரசியல் சட்டத்துக்கு புறம்பாகவும் கைது செய்து பல விதிகளை மீறிய டெல்லி போலீஸ் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி எஸ்கேஎம் கேட்டுக் கொண்டுள்ளது.

விவசாயிகளை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும், பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் – விவசாய சங்கங்கள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்