Aran Sei

பேராசிரியர் சாய்பாபாவுக்கு கொரோனா நோய்த்தொற்று : அவரை பராமரிப்பது பற்றி மனைவி கேள்வி

credits : the hindu

நாக்பூர் சிறையில், 90 சதவீத உடல் செயல்திறனை  இழந்து சக்கர நாற்காலியின் உதவியுடன் வாழ்ந்து வரும் பேராசிரியர் சாய்பாபாவுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் அவர் மீண்டும், தனிமைச் சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

2017-ம் ஆண்டு மகாராஷ்டிராவின் கத்சிரோலி நீதிமன்றம், டெல்லி பல்கலைக்கழக முன்னாள்  பேராசிரியர் சாய்பாபா உட்பட ஐந்து பேருக்கு மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்புகள் இருக்கிறது என்றும்,  நாட்டிற்கு எதிராக சதித்திட்டம் நடத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்றும் குற்றம் சாட்டி, அவரை நாக்பூர் மத்திய சிறையில் அடைத்தது.

போலியோவால் பாதிக்கப்பட்ட பேராசிரியர் சாய்பாபா 90% உடல் செயல்திறனை இழந்தவர். அவர் சக்கர நாற்காலியின் உதவியுடனேயே இருந்து வருகிறார். அவருக்கு கணைய அழற்சி, உயர் ரத்த அழுத்தம், இதயத் தசை நோய், நாள்பட்ட முதுகுவலி போன்ற நோய்களும் உள்ளது.

`மருந்துகளைக் கூட கொடுக்க மறுக்கிறார்கள்” – பேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரம் இருக்க முடிவு

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 12-ம் தேதி, நாக்பூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பேராசிரியர் சாய்பாபாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் மீண்டும் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

’அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட சிறையில் அனுமதி இல்லை’ – பேராசிரியர் சாய்பாபாவின் வழக்கறிஞர்

பேராசியர் சாய்பாபாவின் உடல்நிலை குறித்து சிறை அதிகாரிகளிடம் பேசிய சாய்பாபாவின் சகோதரர் ராம்தேவுடு, ” சாய்பாபா நலமாக இருப்பதாக தெரிவித்தனர். அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிறையில் இருப்பதால் அவருடன் பேசவோ, அவரிடம் பழங்கள் கொடுக்கவோ நான் அனுமதிக்கப்படவிலை. அவருடைய மருத்துவ அறிக்கைகளை நான் சிறை அதிகாரிகளிடம் கோரியிருக்கிறேன்” என  தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி கூறுகிறது.

`பழங்குடியின மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்தால் மாவோயிஸ்டா?’ – பள்ளி ஆசிரியைக் கைது

சூரிய வெளிச்சம் கூட உள்ளே நுழைய முடியாதபடி இருட்டாக இருக்கும் தனிமைச் சிறை அவரின் உடல்நிலைக்கு உகந்ததல்ல என கூறியுள்ள சாய்பாபாவின் மனைவி வசந்த குமாரி, அவருடைய இடது கை வேலை செய்யாததால் அவரை கழிப்பறைக்கு அழைத்துச் செல்ல கூட இரண்டு பேர் தேவைப்படுவர் தற்போது கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு தனிமைச் சிறையில் இருக்கும் அவருக்கு உதவி செய்ய யாரும் முன் வர மாட்டார்கள், அவர் எவ்வாறு தன்னை பராமரித்து கொள்வார் என கேள்வியெழுப்பியுள்ளதாக தி இந்து தெரிவிக்கிறது.

பீமா கோரேகான் வழக்கில் புதிய திருப்பம் – கம்ப்யூட்டரை ‘ஹேக்’ செய்து தகவல்களை மாற்றியது அம்பலம்

சிறை அதிகாரி ரமேஷ் கும்ப்லே, சாய்பாபாவுக்கு உதவிப்புரிய இரண்டு உதவியாளர்கள் இருப்பதாகவும், அவர் குடும்ப உறுப்பினர்களுடன் உரையாட செல்போன் ஏற்பாடு செய்யப்பட்டு தரப்படும் என கூறியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

பீமா கோரேகான் செயல்பாட்டாளர்களை விடுதலை செய்யுங்கள் – இந்தியாவிடம் ஐ.நா வலியுறுத்தல்

முன்னதாக, “சிறையில் அடைக்கப்பட்ட சாய்பாபாவுக்கு அடிப்படை உரிமை மறுக்கப்படுகிறது. தொலைபேசியில் பேச அனுமதிப்பதில்லை. கடிதம், புத்தகங்கள், மருந்துகள் மற்றும் உடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கொடுக்க மறுக்கின்றனர்” என்று அவரது மனைவி வசந்த குமாரி குற்றம் சாட்டியிருந்தார்.

பீமா கோரோகான் வழக்கு – சிறையில் உள்ள சுதா பரத்வாஜ் புத்தகங்கள் பெற என்ஐஏ நீதிமன்றம் அனுமதி

மேலும், “அவரிடம் கொடுப்பதற்கு மருந்துகள், புத்தகங்கள், உடைகள் எடுத்துச் சென்றிருந்தேன். இவற்றில் எதையும் சிறைத்துறை அதிகாரிகள் எடுத்துக்கொள்ளவில்லை. அதற்கு எந்தக் காரணத்தையும் தெரிவிக்கவில்லை. இரண்டு வாரம் கழித்து மீண்டும் சென்றிருந்தேன். அப்போதும் நான் கொண்டுபோன எதையும் அவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் சாய்பாபாவுக்கு கொரோனா நோய்த்தொற்று  : அவரை பராமரிப்பது பற்றி மனைவி கேள்வி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்