Aran Sei

’தில்லி சலோ’ : தலைநகர் நோக்கிப் படையெடுக்கும் ராஜஸ்தான் விவசாயிகள்

தில்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க, ஏராளமான விவசாயிகள்  ராஜஸ்தானில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர் என்று ‘தி இந்து’ தெரிவித்துள்ளது.

விவசாயம் தொடர்பான மூன்று மசோதாக்களுக்குக் கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதியன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பின் சட்டமாக்கப்பட்ட மசோதாக்களை எதிர்த்து ‘தில்லி சலோ’ (தில்லி போவோம்) எனும் பேராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்புவிடுக்கப்பட்டு, இப்போது தில்லி எல்லையில் விவசாயிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அவர்கள் தில்லிக்குள் நுழைவதைத் தடுப்பதற்காக முள்வேலி, மணல் மூட்டைகள் , ட்ரோன்கள், நீர் பீரங்கிகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

’கார்பரேட்டுகளால் சுரண்டப்பட்டுச் சாகபோகிறோம்’ – தில்லி எல்லையைத் தகர்கும் விவசாயிகள்

இந்நிலையில், நேற்று (நவம்பர் 28) மாநில தலைநகர் ஜெய்பூரில் உள்ள மத்திய பூங்காவில் கூடிய ராஜஸ்தான் மாநில விவசாயிகள், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கொள்கைகளுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பியுள்ளனர் என்று தி இந்து கூறியுள்ளது.

அப்போது கூட்டத்தில் பேசிய விவசாய மகாபஞ்சாயத்து சங்கத்தின் தலைவர் ராம்பால் ஜாட், “விவசாயிகளைப் பாதுகாப்பதற்கான ஒரு நடவடிக்கையாக மாநிலத்தில் முக்கியமான நான்கு பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் – கட்டவிழ்த்து விடப்படும் ஒடுக்குமுறை

நாட்டில் உற்பத்தியாகும் பருப்பு, தினை , பார்லி மற்றும் கடுகு ஆகியவற்றில் 40 சதவீதத்திற்கும் அதிகமானவை, ராஜஸ்தானில் இருந்தே வருகிறது என்று குறிப்பிட்டுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் பாலைவனப் பகுதியாக இருப்பதால் மற்ற மாநிலங்களை விட விவசாயப் பொருட்களின் உற்பத்தி செலவு அதிகமாக உள்ளது என்றும், அதனால் குறுவை சாகுபடிக்கான குறைந்தபட்ச ஆதார விலையைக் கூட்டித் தர வேண்டும் என ராஜஸ்தான் மாநில அரசு, மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளது என்று ‘தி வயர்’ தெரிவித்துள்ளது.

குறைந்தபட்ச ஆதார விலை – மாநிலங்கள் கேட்டது ஒன்று, மத்திய அரசு கொடுத்தது ஒன்று

ராஜஸ்தான் மாநிலம், நாட்டின் மொத்த  உற்பத்தியில் 48.6 சதவீத தினையையும், 58.9 சதவீத கொண்டைக் கடலையையும், சோயா, மக்காச்சோளம் போன்றவற்றைக் கணிசமாக உற்பத்தி செய்கிறது.

.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாபில் தொடரும் போராட்டம் – 12 விவசாயிகள் பலி

 

ஸ்ரீகங்காநகர், ஹனுமன்கர் மற்றும் சிகார் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளை, அகில இந்திய விவசாய சபை திரட்டியுள்ளது. பின், விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன்,  மூன்று மாவட்டங்களில், அவர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். அதே நேரம், இந்த விவசாயக் குழுவில் இருந்து ஏராளமான விவசாயிகள், ஸ்ரீங்கநகரில் இருந்து தில்லிக்குப் புறப்பட்டு சென்றுள்ளனர் என்று தி இந்து குறிப்பிட்டுள்ளது.

விவசாயிகளின் போராட்டம் குறித்து, காங்கிரஸை சேர்ந்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில், “இந்த கடினமான கட்டத்தில் கூட நமது விவசாயிகள் பொருளாதாரத்திற்கு தங்களது பங்களிப்பை வழங்குகிறார்கள். ஆனால் நரேந்திர மோடி அரசு, அவர்களுக்கு எதிராக அடக்குமுறை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டு, அதை நிறைவேற்ற வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான மசோதாக்கள் – ராஜஸ்தானிலும் நிறைவேற்றம்

நவம்பர் 2 ஆம் தேதி, மத்திய அரசு கொண்டு வந்த மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக ராஜஸ்தான் சட்டபேரவையில் மூன்று மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, சட்டமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

’தில்லி சலோ’ : தலைநகர் நோக்கிப் படையெடுக்கும் ராஜஸ்தான் விவசாயிகள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்