Aran Sei

`இளைஞர்களே, கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளுடன் பேசுங்கள்’ – பிரதமர் மோடி உரை

விவசாயிகளின் பல ஆண்டுக் கோரிக்கைகள், விவசாயச் சீர்த்திருத்த சட்டங்கள் மூலம் பூர்த்தி செய்யப்பட்டு, அவர்களுக்குப் புதிய வாய்ப்புகளை அளித்துள்ளன என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இன்று (நவம்பர் 29) பிரதமர் நரேந்திர மோடி ’மான் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் பேசியுள்ளார். அப்போது, ”எல்லா அரசியல் கட்சிகளும் விவசாயிகளுக்கு வாக்குறுதிகளை மட்டும் அளித்து வந்தன. ஆனால் இப்போதுதான் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.” என்று தெரிவித்துள்ளார்.

’கார்பரேட்டுகளால் சுரண்டப்பட்டுச் சாகபோகிறோம்’ – தில்லி எல்லையைத் தகர்கும் விவசாயிகள்

“சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட விவசாயச் சீர்திருத்த சட்டங்கள் நம் விவசாயிகளுக்குப் புதிய கதவுகளைத் திறந்துள்ளன. அது மட்டுமன்றி, அவர்களுக்குப் புதிய உரிமைகளையும் வாய்ப்புகளையும் அளித்துள்ளன.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிராவில் உள்ள துலே நகரைச் சேர்ந்த ஜிதேந்திர போய்ஜி என்ற விவசாயியை மேற்கோள் காட்டிப் பேசியுள்ளார். அவரது சோளப் பயிருக்கான பணம், வணிகர்களால் நான்கு மாதங்கள் நிலுவையில் வைக்கப்பட்டிருந்தது என்று கூறியுள்ளார்.

குறைந்தபட்ச ஆதார விலை – மாநிலங்கள் கேட்டது ஒன்று, மத்திய அரசு கொடுத்தது ஒன்று

”இந்தச் சூழ்நிலையில், செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட புதிய விவசாயச் சட்டங்கள் அவருக்கு உதவியது. இந்தச் சட்டத்தின் படி, விவசாயிகளின் அனைத்து நிலுவைத் தொகையும், பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்ட மூன்று நாட்களுக்குள் கொடுக்கப்பட வேண்டும். அப்படி வழங்கப்படவில்லை என்றால், விவசாயிகள் புகார் அளிக்க முடியும்.” என்றார் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அதன் மூலம் நிலுவையில் உள்ள மீதித் தொகையை, சில நாட்களுக்குள் பெற்றுக்கொள்ள முடியும் என்று கூறியுள்ளார்.

விவசாயச் சட்டங்களுக்கு 50% விவசாயிகள் எதிர்ப்பு : ஆய்வில் முடிவு

“எந்தத் துறையானாலும் தவறான புரிதல்களையும் வதந்திகளையும் விடுவித்து, சரியான அறிவைப் பெற்றால், ஒவ்வொரு தனி நபரும் சிறப்பாகச் செயல்பட முடியும்.” என்று பிரதமர் உரையாற்றியுள்ளார்.

ராஜஸ்தானில் உள்ள பரானைச் சேர்ந்த விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி முகமது அஸ்லமைப் பற்றி மேற்கோள் காட்டியுள்ளார். அவர் வாட்ஸ் அப் குழுகள் மூலம் சந்தையில் இருக்கும் விவசாயப் பொருட்களின் விலைகள் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திவருவதாகப் பாராட்டியுள்ளார்.

‘மத்திய அமைச்சரை வரச் சொல்லுங்கள்’ – விவசாயச் சங்கங்கள்

“இளைஞர்களே, குறிப்பாக விவசாயம் படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களே, அருகிலுள்ள கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளுடன் பேசுங்கள். விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள புதுமைகள் குறித்தும், சமீபத்திய விவசாயச் சீர்திருத்த சட்டங்கள் குறித்தும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். இது எனது வேண்டுகோள்.” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

மத்திய அரசு இயற்றிய விவசாயச் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுதும், விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. சட்டங்களை நீக்க வேண்டும் என்று இரண்டு மாதங்களுக்கு மேலாக பஞ்சாப்பில், விவசாயிகள் ரயில் மறியல், சாலை மறியல் போன்ற போராட்டங்களைச் செய்து வந்தனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாபில் தொடரும் போராட்டம் – 12 விவசாயிகள் பலி

இதைத் தொடர்ந்து, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் போன்ற பல மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், தில்லிக்குள் நுழைந்து போராட்டம் செய்ய முயன்றனர். அவர்களை கண்ணீர்ப் புகைக் குண்டு, தண்ணீர் பீரங்கி, தடியடிகள் மூலம், காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்நிலையில், இளைஞர்களை விவசாயிகளிடம் சென்று விவசாயச் சட்டங்கள் குறித்து பேசுங்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

`இளைஞர்களே, கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளுடன் பேசுங்கள்’ – பிரதமர் மோடி உரை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்