Aran Sei

டெல்லியில் 90 ரூபாயை தொட்டது பெட்ரோல் விலை – சில மாநிலங்களில் லிட்டர் 100 ரூபாய்க்கு விற்பனை

தொடந்து 11 நாளாக அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை இன்று (பிப்ரவரி 19) தலைநகர் டெல்லியில், லிட்டருக்கு தலா 31 காசுகளும், 33 காசுகளும் உயர்ந்திப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விலை உயர்வின் மூலம், டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 90.19 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.60 ஆகவும் விற்பனை செய்யப்படுவதாகவும், நாட்டின் பொருளாதார தலைநகர் மும்பையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.96.62 ஆகவும், டீசல் விலை ரூ.87.67 ஆகவும் விற்பனையாவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலம் கங்கா நகரில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ. 100.82, டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.83 ஆக விற்பனையாவதாகவும், அதைத் தொடர்ந்து மத்திய பிரதேசத்தின் அனுப்பூரில், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.57 , டீசல் லிட்டருக்கு ரூ.91.04 ஆக விற்கப்படுவதாகவும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டுநர் உரிமத்தில் இருக்கும் புகைப்படத்தின் அடிப்படையில் டெல்லி கலவரத்தில் ஈடுபட்டதாக 94 நபர்கள் கைது – டெல்லி காவல்துறை

நாட்டில், எரிபொருட்களின் விலை, வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்திருப்பதை குறைக்க, கலால் வரிகளைக் குறைக்கும் திட்டம் அரசிற்கு இல்லையென, நாடாமன்றத்தில் கடந்த வாரம்  மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பிப்ரவரி 17 ஆம் தேதி, எண்ணெய் ஏற்றுமதி நிறுவனங்கள், தங்கள் உற்பத்தி கட்டுப்பாடு விதிகளைத் தளர்த்திக்கொள்ள வேண்டும் எனக் தர்மேந்திர பிரதான் கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலையின் மாற்றத்திற்கு ஏற்ப, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை, தினசரி மாற்றியமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் 90 ரூபாயை தொட்டது பெட்ரோல் விலை – சில மாநிலங்களில் லிட்டர் 100 ரூபாய்க்கு விற்பனை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்