மத்திய அரசின் விவசாயச் சீர்திருத்தச் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் குடியரசு தின பேரணி டெல்லியில் மட்டுமின்றி, வேறு பல மாநிலங்களிலும் அமைதியான முறையில் நடத்தப்பட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தித் தொகுப்பு தெரிவிக்கிறது.
1.5 லட்சம் டிராக்டர்களுடன் விவசாயிகளின் படை தயார் – அணிவகுப்பால் அதிரப்போகும் டெல்லி
பஞ்சாபில் பட்டியாலா, சங்க்ரூர் போன்ற மாவட்டங்களில் நடத்தப்பட்ட விவசாயிகளின் பேரணிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆனால், வன்முறை தொடர்பான எந்த செய்தியும் இல்லை என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவிக்கிறது.
ஹரியானாவில் மாநிலம் முழுவதிலும் உள்ள விவசாயிகள் அமைதியான முறையில் டிராக்டர் பேரணி நடத்தி மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
மும்பையின் ஆசாத் மைதானத்தில் மூன்று நாட்களாக நடந்த வந்த விவசாயிகளின் போராட்டம் செவ்வாய்க் கிழமை முடித்து வைக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் மகாராஷ்டிரா முழுவதிலிருந்தும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
பெங்களூருவில் ஆயிரக்கணக்கான விவசாயிகள், விவசாயிகளின் பேரணியில் பங்கேற்றனர். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நூற்றுக் கணக்கான டிராக்டர்கள் பெங்களூரு நகரத்துக்குள் நுழைந்து பேரணி நடத்தின என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவிக்கிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் விவசாயிகளும் அரசியல் கட்சிகளும் மாபெரும் பொதுக்கூட்டங்களை மாநிலத்தின் பல பகுதிகளிலும் நடத்தியுள்ளனர்.
மத்திய பிரதேசத்தின் 55 மாவட்டங்களில் குறைந்தத 20 மாவட்டங்களில் டிராக்டர் பேரணிகள் நடத்தப்பட்டன என்று விவசாய சங்கங்கள் கூறியுள்ளன. மாநில தலைநகர் போபாலில் விவசாயிகள் 15 கிமீ தூரத்திற்கு டிராக்டர் மற்றும் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் அகில இந்திய கிசான் சபா, கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய அமைப்புகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் டிராக்டர் மற்றும் மோட்டார் சைக்கிள் பேரணிகளை நடத்தியுள்ளனர்.
உத்தர் காண்ட், ஹிமாச்சல பிரதேசம், ஒடிசாவின் சில பகுதிகள், குஜராத், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களிலும் விவசாயிகள் போராட்டங்கள் பற்றிய செய்திகள் வந்துள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவிக்கிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.