மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் இருந்து ஹரியானா மாநில விவசாயிகள் சங்க தலைவர் ஜஸ்தேஜ் சிங் சந்து காயமின்றி தப்பியுள்ளார்.
பாரதிய கிசான் யூனியனின் ஹரியானா மாநில பொதுச் செயலாளரும், ஹரியானா விவசாய துறையின் முன்னாள் அமைச்சர் மறைந்த ஜஸ்விந்தர் சந்துவின் மூத்த மகனுமான ஜஸ்தேஜ் சிங் சந்தூ, பெஹோவா அருகே உள்ள சுங்கச்சாவடியை நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்ததாகவும், இருவர் மோட்டர் சைக்கிளில் முந்திக் கொண்டு வந்து, ஜஸ்தேஜ் சிங் சந்துவை சுட, அக்குண்டு ஓட்டுனர் இருக்கைக்கு அருகில் உள்ள கண்ணாடி வழியாக உள்ளே வந்து, முன்பக்க கண்ணாடி வழியாக வெளியே சென்றுள்ளது என்று காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.
பர்னாலாவில் கூடிய லட்சக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் – டெல்லி போலீசுக்கு எச்சரிக்கை
ஜஸ்தேஜ் சிங் சந்துவின் கார் பறிமுதல் செய்யப்பட்டு, தடயவியல் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
“கடந்த பல நாட்களாக, பெஹோவாவில் முகாமிட்டு விவசாயிகளைச் சந்தித்து வருகிறேன். இன்று, இரண்டு இளைஞர்கள் என்னுடைய காரைத் துரத்திச் வந்து, என்னை கொலை செய்யும் நோக்கத்துடன் துப்பாக்கியால் சுட்டனர்.” என்று ஜஸ்தேஜ் சிங் சந்து தெரிவித்துள்ளார்.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.