உத்தரகண்ட் மாநிலம் ரூர்கியில் நாளை நடைபெறவிருக்கும் தர்ம சன்சாத் மாநாடு, இஸ்லாமியர்களை குறிவைக்கும் பொதுவான வெறுப்பு விழாவாக மாறக்கூடாது என்று அம்மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மாநாட்டில் விரும்பத்தகாத பேச்சுகள் பேசப்படவில்லை என்பதை பதிவு செய்யுமாறு உத்திரகண்ட் உயர் அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ள நீதிபதிகள், “வெறுக்கத்தக்க பேச்சு பேசப்பட்டால், அதற்கு உத்தரகண்ட் தலைமைச் செயலாளர் பொறுப்பேற்க வேண்டும். நாங்கள் தலைமைச் செயலாளரை நீதிமன்றத்திற்கு வரவழைப்போம்” என்று கூறியுள்ளனர்.
“வெறுக்கத்தக்க பேச்சு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றுங்கள். வெறுப்பூட்டும் பேச்சை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுங்கள்” என்று தெரிவித்துள்ளனர்.
ஹரிதுவாரில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை பேச்சு – வழக்குப் பதிந்தும் கைது செய்யாத காவல்துறை
மற்றொரு வழக்கு விசாரணையில், இந்த மாத தொடக்கத்தில், ஹிமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற மாநாட்டில், இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள் மற்றும் இந்துக்கள் வன்முறையில் ஈடுபட்ட அழைப்பு விடுக்கப்பட்டது தொடர்பாக அம்மாநில அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
ஆத்திரமுட்டும் வகையில் பேசும் பேச்சாளர்களுக்கு எதிராக பாஜக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று சுட்டிக்காட்டிய நீதிமன்றம், “அரசு இது போன்ற செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும். தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா இல்லையா என்பதை மாநில அரசுகள் எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும்” என்று கூறியுள்ளது.
“மே 7 ஆம் தேதிக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து, இது போன்ற நடவடிக்கைளை தடுக்க என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதை எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.
“இந்த நிகழ்வுகள் திடீரென நடக்கவில்லை. ஒரே இரவில் நடப்பவை அல்ல. இவை முன்கூட்டியே அறிவிக்கப்பட்டவை. நீங்கள் ஏன் உடனடியாக செயல்படவில்லை? ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் உள்ளன,” என்று நீதிபதிகள் மேலும் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரகண்ட் மாநில ஹரித்வாரில் மூன்று நாட்கள் நடைபெற்ற சர்ம சன்சாத் மாநாட்டில், இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சு, இனப்படுகொலைக்கான வெளிப்படையான அழைப்பும் விடுக்கப்பட்டன. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Source: NDTV
அண்ணாமலை நேரடியா கமலாலயம் வரேன்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.