நாகாலாந்து மாநிலத்திற்குத் தனிக்கொடியும் அரசியலமைப்பும் இருக்காது என்றும் தேசியக் கொடியும் இந்திய அரசியலமைப்பும் இந்திய மக்களின் பெருமை என்றும் நாகாலாந்து ஆளூநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
58 ஆவது நாகாலாந்து மாநில தினத்தை முன்னிட்டு, அவர் மக்களுக்குச் செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அசாம், மணிப்பூர் மற்றும் அருணாசலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் நாகா இனமக்கள் வசிக்கும் பகுதிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்குப் பதில் அளிக்கும் விதமாக, “இந்தியாவின் சாராம்சமே பன்முகத்தன்மைகளுக்கு மத்தியில் உள்ள அதன் ஒற்றுமைதான்.” என்று தெரிவித்துள்ளார்.
பொழிலன் கைது – ‘இந்தியா நாடல்ல; மாநிலங்களுக்கு தனி கொடி வேண்டும் ’ : வைகோ
”இந்திய தேசியக் கொடியும் அரசியலமைப்பும் இந்திய மக்களின் பெருமை. இந்தியாவில் ஒரே ஒரு தேசியக் கொடியும், ஒரே ஒரு அரசியலமைப்பும் மட்டுமே இருக்கும் என்பதில் இந்திய அரசு மிகத் தெளிவாக உள்ளது” என்று கூறியுள்ளார்.
இதற்கு எதிராகச் சிலர் மோசமான பொய்களைக் கூறுகிறார்கள் என்றும், “அவர்கள் மக்களைக் குழப்பவும் தவறாக வழிநடத்தவும் முயற்சிக்கிறார்கள்,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு நாள் : மாநிலத்தின் இறையாண்மையைக் காப்போம் – தோழர் தியாகுவின் சிறப்புக் கட்டுரை
“இந்திய தேசத்தில் பிராந்தியங்களின் ஒற்றுமையும் இறையாண்மையும் மிக உயர்வானவை. இது குறித்து யாருடனும் இந்திய அரசு ஒருபோதும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இடமில்லை. இந்த மாபெரும் தேசத்தைச் சிதைப்பதற்கான எந்தவொரு தவறான முயற்சியும் பொறுத்துக்கொள்ள முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.
நாகாலாந்து தற்போது வரலாற்றின் முக்கியமான இடத்தில் நிற்கிறது என்றும், இப்போது எடுக்கப்படும் சரியான முடிவு, எதிர்காலத்தையும் வரவிருக்கும் தலைமுறையினரின் தலைவிதியையும் தீர்மானிக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
திரிபுராவில் அகதிகள் எதிர்ப்பு – பாஜகவுடன் கைகோர்த்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
2019 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 ஆம் தேதி நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில், எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு எட்டப்பட்டு, நாகாலாந்து மக்கள் புதிய விடியலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.