மத்தியப்பிரதேச பாஜக அரசு, வரும் சட்ட மன்ற கூட்டத் தொடரில் மதமாற்றத்திற்கு எதிராக, மத மாற்ற தடைச் சட்டம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், மத மாற்ற தடைச் சட்டம் தேவையற்றதென பாஜக மத்திய அமைச்சர் உமாபாரதி தெரிவித்துள்ளார்.
திருமணத்திற்காகவோ அல்லது பலவந்தமாகவோ மதமாற்றம் செய்தால், 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் உத்தரப்பிரதேச அரசின் சட்டத்திற்கு அம்மாநில ஆளுநர் அண்மையில் ஒப்புதல் அளித்திருந்தார்.
இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஆண்கள், இந்துப் பெண்களைக் காதல் என்ற பெயரில் திருமணம் முடித்து மத மாற்றம் செய்கிறார்கள் என்றும், இந்து மதத்தைச் சிறுபான்மைச் சமூகமாக மாற்றி வருகிறார்கள் என்றும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் கருத்து தெரிவித்துவந்தனர்.
உத்தரப்பிரதேசம் : திருமணத்திற்காக மதமாற்றத் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், “இந்துப் பெண்களைப் பாதுகாக்க, ‘லவ் ஜிகாது’க்கு எதிராகச் சட்டம் இயற்றப்படும்.” என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறியிருந்தார். இதுதொடர்பாக அவசரச் சட்டத்தை உருவாக்க அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டிருந்தார்.
‘லவ் ஜிகாத்’ – சேர்ந்து வாழும் உரிமை அடிப்படையானது – அலகாபாத் உயர்நீதிமன்றம்
இந்நிலையில், முன்னாள் மத்தியப்பிரதேச முதல்வரும் பாஜக மத்திய அமைச்சருமான உமாபாரதி ” இந்தியாவில் மத மாற்றங்கள் தேவையில்லை, ஏனென்றால் இங்கே இந்துக்கள் குர்ஆனையோ, பைபிளையோ படிக்கவும், மசூதிகள் மற்றும் தேவாலயங்களைப் பார்வையிடவும் வாய்ப்புள்ளதென மத்திய பிரதேச மத மாற்ற தடை மசோதாவைக் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்” என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
`லவ் ஜிகாத்’ இருக்கு ஆனா இல்ல : சிறப்பு விசாரணைக் குழு கூறுவது என்ன?
இக்கருத்தைக் காங்கிரஸ் ஆதரித்துள்ளது. “அரசியலில் அழியாத தைரியத்தின் அடையாளமாக இருக்கும் உமா பாரதி, மீண்டும் மத மாற்றம் குறித்த சட்டம் தேவையில்லை என்று உண்மையைக் கூறியுள்ளார்” என்று குவாலியர்-சம்பல் பிராந்தியத்திற்கான காங்கிரஸ் ஊடகப் பொறுப்பாளர் கே.கே.மிஸ்ரா கருத்துத் தெரிவித்துள்ளார்.
“லவ் ஜிகாத்” சட்டங்களும் வன்முறை வெறுப்புப் பிரச்சாரமும் – ஒரு விரிவான பார்வை
இந்த மசோதா ‘லவ் ஜிகாத்’ எனும் நிகழ்விலிருந்து சிறுமிகளைக் காப்பாற்றும், அதனால் நாங்கள் ஆதரிக்கிறோம்” என்று பாஜக மாநிலச் செய்தி தொடர்பாளர் ரஜ்னீஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
“சட்டசபையில் மதமாற்ற தடுப்பு மசோதாவை ஆதரிக்குமா என்பதை காங்கிரஸ் தெளிவுபடுத்த வேண்டும்” என்று மத்தியப்பிரதேச உள்துறைஅமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செய்தியாளர்களிடம் பேசும்போது கேள்வி எழுப்பியுள்ளார்.
“லவ் ஜிகாத்” திற்கு எதிராகச் சட்டம் இயற்ற முடியாது : உ.பி., சட்டக் குழு தலைவர்
கட்டாய மத மாற்றங்களைச் செயல்படுத்த திருமணம் செய்தால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் இதுபோன்ற திருமணங்களை நடத்திவைப்பவர்கள் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் இதுபோன்ற திருமணங்களைச் செயல்படுத்தும் அமைப்புகளின் பதிவு ரத்து செய்யப்படும் என்றும் மாநில உள்துறைஅமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.