உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில், இரண்டு ஜாட் இளைஞர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, வகுப்புவாத கலவரம் நடந்தது.
சம்பவத்தன்று காவால் கிராமத்தில் இரண்டு ஜாட் இளைஞர்களின் தகனம் முடிந்து மக்கள் கூட்டம் திரும்பிக் கொண்டிருந்த போது வன்முறை ஏற்பட்டது. அதில் 60 பேர் உயிரிழந்தனர் மற்றும் 40,000 பேர் இடம்பெயர்ந்தனர்.
இந்த வன்முறையில் ஈடுபட்டதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் விக்ரம் சைனி மற்றும் 26 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணையை எதிர்கொண்டனர்.
விக்ரம் சைனி உத்தரபிரதேசத்தில் உள்ள கட்டவுலியைச் சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவர் ஜாமீனில் இருந்தார்.
2013ம் ஆண்டு முசாபர்நகர் கலவர வழக்கில் விக்ரம் சைனி மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், விக்ரம் சைனி உட்பட 12 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நாடாளுமன்ற உறுப்பினர் – சட்டமன்ற உறுப்பினர் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
முசாபர்நகர் கலவரம்: பாஜக தலைவர்கள் மீதான வழக்கு – வாபஸ் பெற முயலும் ஆதித்யநாத் அரசு
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி கோபால் உபாத்யாய், கலவரம் மற்றும் பிற குற்றங்களுக்காக விக்ரம் சைனி உட்பட 12 பேரை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து, ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10,000 அபராதம் விதித்தார்.மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 15 பேரை போதிய ஆதாரம் இல்லாததால் நீதிமன்றம் விடுவித்தது.
இதனையடுத்து, பாஜக சட்டமன்ற உறுப்பினர் விக்ரம் சைனி இன்று காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். இருப்பினும், மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனை என்பதால், அவருக்கு உடனே ஜாமீன் கிடைத்தது.
“விக்ரம் சைனிக்கு தண்டனை வழங்கப்பட்ட உடனேயே, ஜாமீன் வழங்குவது நீண்ட காலமாக நீதிக்காக காத்திருப்பவர்களுக்கு செய்யப்படும் அநீதியென” முசாபர்நகர் கலவரத்தில் இடம்பெயர்ந்த மக்களின் மறுவாழ்வுக்கு உதவிய அஃப்கார் இந்தியா அறக்கட்டளையின் நிறுவனர் அக்ரம் அக்தர் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
Source : the hindu
பேட்டியும் கிடையாது ஒன்னும் கிடையாது | நா*சேகராக மாறிய H. Raja | Aransei Roast | BJP | DMK
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.