Aran Sei

மதத்தின் பெயரால் துன்புறுத்தல் கூடாது – திரைக் கலைஞர் சாய் பல்லவி கருத்து

ஸ்லாமியர்கள் பசு கடத்தலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டு இந்துத்துவ கும்பல்களால் படுகொலை செய்யப்படுவதை குறிப்பிட்டு திரைக்கலைஞர் சாய் பல்லவி பேசியுள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

தெலுங்கில் ரானா டகுபதி, சாய் பல்லவி இணைந்து நடித்து இருக்கும் விரட்டா பர்வம் என்ற திரைப்படம் வரும் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படம் சம்பந்தமான விளம்பரபடுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சாய் பல்லவி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் பண்டிட்டுகள் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்பதை காட்டியது. அது மத ரீதியான மோதல் என்று கருதினால், சமீபத்தில் பசுவை வண்டியில் எடுத்துச்சென்ற ஒருவரை இஸ்லாமியர் என்று சந்தேகித்து கொலை செய்கின்றனர். பின்னர் அவர்கள் “ஜெய் ஸ்ரீ ராம்” என முழக்கமிடுகின்றனர். இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் என்ன வித்தியாசம்? மதத்தின் பெயரால் யாரையும் துன்புறுத்தக் கூடாது என்று சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.

காஷ்மீரி இந்து பண்டிட்கள் கொலை செய்யப்படுவதற்கு குரல் கொடுக்கும் மக்கள் இதற்கும் குரல் கொடுக்க வேண்டும் என்று திரைக்கலைஞர் சாய் பல்லவி கூறியுள்ளார்.

ஷமூக ஆர்வலர்களுக்கு இன்னுமா பத்தல | Rajiv Gandhi Interview

மதத்தின் பெயரால் துன்புறுத்தல் கூடாது –  திரைக் கலைஞர் சாய் பல்லவி கருத்து

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்