Aran Sei

மோடி அரசு, நாட்டின் பட்ஜட்டையும் வீட்டின் பட்ஜட்டையும் கெடுத்துள்ளது – சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்து ராகுல் காந்தி விமர்சனம்

த்திய அரசு நிதிநிலைஅறிக்கை தாக்கல் செய்தவுடனே சமையல் எரிவாயு சிலிண்டர் விலையேற்றம் செய்வதா என்று காங்கிரஸ் முன்னாள் தேசியத் தலைவர் ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசு சார்பான எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (ஓஎம்சி) மெட்ரோ நகரங்களில் மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.25 ஆக உயர்த்தியுள்ளன.கடந்த இரண்டு மாதங்களில் 60 விழுக்காடு விலை ஏறியுள்ளதாக இந்தியன் ஆயில் கார்ப் (ஐஓசி) தலைவர் சஞ்சீவ் தெரிவித்துள்ளதாக தி எக்னாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் நிதி நிலை கடுமையாக மோசமடைந்துள்ளது – 15வது நிதி கமிஷன் அறிக்கை

மானியத் தொகை (வங்கிக் கணக்குகளில் மாற்றப்பட்டது) மே மாதத்தில் சிலிண்டருக்கு ரூ .159.29 ஆக இருந்தது, இது ஜூன் மாதத்தில் ரூ .204.95 ஆகவும், இந்த மாதத்தில் சிலிண்டருக்கு ரூ .257.74 ஆகவும் உயர்த்தப்பட்டது” என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போது மாநிலத்தலைநகரங்கள் மற்றும் மெட்ரோ நகரங்களில் மானியமில்லாத வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்ந்துள்ளதாக தி இந்தியா.காம் தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் மட்டத்திலும் தனியார்மயம் – செயலாளர்களாக தனியார் நிபுணர்களை நியமிக்க மத்திய அரசு முடிவு

டெல்லியில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.719 ஆகவும், கொல்கத்தாவில் 745.50 ஆகவும், மும்பையில் ரூ.719 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்குக் காங்கிரஸ் முன்னாள் தேசியத் தலைவர்  ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர்பதிவில்  ”பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையேற்றப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கம் வரவுசெலவு திட்ட அறிக்கைகள் வெளியிட்ட சில தினங்களிலேயே சிலிண்டர் விலையை உயர்த்துவதா, இதன்மூலம் மோடி அரசு நாட்டின் மற்றும் வீடுகளின் வரவு செலவுத் திட்டத்தைச் சீர்குலைத்துவிட்டது” என்று காங்கிரஸ் முன்னாள் தேசியத் தலைவர்  ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மோடி அரசு, நாட்டின் பட்ஜட்டையும் வீட்டின் பட்ஜட்டையும் கெடுத்துள்ளது – சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்து ராகுல் காந்தி விமர்சனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்