Aran Sei

ஒடிசா : வனப்பகுதியில் மாவோயிஸ்ட் சுட்டுக் கொலை

டிசா மாநிலம் மல்கன்கிரி மாவட்டத்தின் ஸ்வாபிமான் அஞ்சல் பகுதியில், நேற்று (நவம்பர் 26) மாவோயிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இது குறித்து ஒடிசா காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், “ஸ்வாபிமான் அஞ்சலில் பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடை பெற்றது. மோதலுக்குப் பிறகு ஒரு மாவோயிஸ்ட்டின் உடலும், ஒரு ஏ.கே 47 ரக துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளது. காயமடைந்த மாவோயிஸ்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இப்போது, பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்பாக உள்ளார்கள்.” என்று தெரிவித்துள்ளது.

“நக்சலைட்டுகள் என்ற பெயரில் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம்” – சத்தீஸ்கர் முதல்வர்

மல்கன்கிரி மாவட்டம், ​​ஜாதம்போ காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட ஜான்ட்ரி கிராம பஞ்சாயத்து பகுதியில், சிறப்பு பாதுகாப்புப் படை வீரர்கள் குழுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடை பெற்றுள்ளது.

ஒரு ஏ.கே 47 ரக துப்பாக்கி, இரண்டு பத்திரிகைகள், வெடிமருந்துகள் மற்றும் பிற தடை செய்யப்பட்ட பொருட்கள் சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக ‘தி இந்து’ தெரிவித்துள்ளது.

’மாவோயிஸ்ட்’ வழக்கில் ஜாமீன். போராடுவது தேச துரோகமாகாது – கேரள நீதிமன்றம்

மேலும், மாநில காவல்துறையின் சிறப்புப் பிரிவு,  மாவட்ட தன்னார்வ படை, எல்லை பாதுகாப்புப் படை ஆகியோர் அடங்கிய சிறப்பு பாதுகாப்புப் படை வீரர்கள் குழு இந்த தாக்குதலை நடத்தியுள்ளது என்றும், ஆந்திரா-தெலுங்கானா காவல்துறையை சேர்ந்த நக்சல் ஒழிப்பு பிரிவான கிரே ஹவுண்ட்ஸ் பிரிவும் இதில் பங்கேற்றுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

“வடக்கு ஸ்வாபிமான் அஞ்சல் பகுதியில் ஒடிசா காவல்துறை தரப்பிலிருந்து தாக்குதல் நடைபெற்றது இதுவே முதல் முறை. குரசேத் பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினருக்கான தளத்தை நிறுவிய பின்னரே இது சாத்தியமானது.” என்று ஒரு அதிகாரி கூறிள்ளதாக ‘தி இந்து’ குறிப்பிட்டுள்ளது.

இதற்கு முன் கடந்த ஜூலை மாதம், கந்தமால் மாவட்ட வனப்பகுதியில் நான்கு மாவோயிஸ்ட்டுகள், சிறப்பு பாதுகாப்புப் படை குழுவால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர் என்று ‘ட்ரூபைன் இந்தியா’ இணையதளம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 22-ம் தேதி, பீகார் மாநிலம், கயா மாவட்டத்தில் உள்ள பராச்சட்டி என்னும் வனப்பகுதியில் மூன்று மாவோயிஸ்டுகள், பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

மாவோயிஸ்ட் கொலை : ’போலி எண்கவுண்டர் என சந்தேகமாகவுள்ளது’-குடும்பத்தினர்

மேலும், கடந்த நவம்பர் 3-ம் தேதி, கேரளா மாநில வயநாடு பகுதியில், தண்டர்போல்ட் கமாண்டோக் குழுவால், தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சார்ந்த மாவோயிஸ்ட் வேல்முருகன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இது ஒரு போலி கவுண்ட்டர் என வேல்முருகனின் குடும்பம் கூறியது குறிப்பிடத்தக்கது.

ஒடிசா : வனப்பகுதியில் மாவோயிஸ்ட் சுட்டுக் கொலை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்