திருமணத்தை பயன்படுத்தி ஒருவரை மதம் மாற கட்டாயப்படுத்துபவர்களுக்கு பத்து வருடங்கள் சிறை தண்டனை வழங்க மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
இந்து பெண்களை இஸ்லாமிற்கு மதமாற்றம் செய்யும் போலி திருமணங்களை தவிர்க்க பல சட்டங்களை நடமுறைபடுத்த இருப்பதாக பாஜக ஆளும் மாநிலங்கள் கடந்த சில வாரங்களாக அறிவித்து வருகின்றன.
`லவ் ஜிகாத்’ இருக்கு ஆனா இல்ல : சிறப்பு விசாரணைக் குழு கூறுவது என்ன?
இந்நிலையில், தர்ம் ஸ்வதந்திரய மசோதா 2020 மூலம் ஒருவரை கட்டாயப்படுத்தி, அச்சுறுத்தி, ஏமாற்றி மதம் மாற செய்பவர்களுக்கு பத்தாண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட வேண்டும் என மத்திய பிரதேச அரசு திட்டமிட்டுள்ளதாக அம்மாநிலத்தின் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா அறிவித்துள்ளார்.
இந்த வரைவு மசோதா டிசம்பர் இரண்டாவது வாரத்தில் அமைச்சரவை முன் சமர்ப்பிக்கப்பட்டு, சட்டசபையின் முதல் அமர்வின் போது தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“லவ் ஜிகாத்” சட்டங்களும் வன்முறை வெறுப்புப் பிரச்சாரமும் – ஒரு விரிவான பார்வை
‘லவ் ஜிகாத்’ எனும் வார்த்தையை எந்த சட்ட அமைப்பும் இதுவரை அங்கீகரித்தது இல்லை. இஸ்லாமிய ஆண்கள் இந்து பெண்களை காதலித்து திருமணம் செய்வதை லவ் ஜிகாத் என வலதுசாரி அமைப்புகள் குறிப்பிடுகின்றனர்.
பாஜக ஆளும் ஹரியானா, கர்நாடகா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் லவ்-ஜிகாத்திற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப் போவதாக அறிவித்துள்ளன.
“லவ் ஜிகாத்” திற்கு எதிராகச் சட்டம் இயற்ற முடியாது : உ.பி., சட்டக் குழு தலைவர்
கர்நாடகாவின் முதல்வர் எடியூரப்பா, தன்னுடைய அரசு லவ்-ஜிகாத்தால் நடக்கும் மதமாற்றங்களை தடுத்து நிறுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
உத்திர பிரதேச அரசு சில தினங்களுக்கு முன்னர் இதைப் போன்ற ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் சட்டங்கள் நீதிமன்றத்தால் எதிர்க்கப்படலாம் என கீ ஸ்டோன் எனும் சட்ட நிறுவனத்தின் உறுப்பினரான, அருண் ஸ்ரீ குமார், டைம்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். “ஒரு பெண், திருமணத்திற்காக மதம் மாறினால் தான் குற்றம் எனும் போது, பாலின பாகுபாட்டின் அடிப்படையில் இது எதிர்ப்பை சந்திக்கலாம்” என்று அவர் கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர், வயது வந்த ஒரு ஆணும் பெண்ணும் மதம் மாறுவது தொடர்பான முடிவுகளை எடுக்க தகுதியானவர்களே என அலஹாபாத் நீதிமன்றம் தெரிவித்தது. அதுவும், திருமணங்களுக்காக மதம் மாறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என முன்னர் சொல்லியிருந்த தீர்ப்பை திரும்பப் பெற்றுக் கொண்டு “(சம்பந்தப்பட்டவர்களின்) திருமண உறவை முறிப்பதற்கென போலியாf ஜோடிக்கப்பட்ட வழக்காக இருக்கிறது” என அலகாபாத் நீதிமன்றம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.