Aran Sei

கர்நாடகா: பாடநூலில் பெரியார், பகத் சிங், நாராயணகுரு குறித்த பாடங்கள் நீக்கம் – காங்கிரஸ் கட்சி கண்டனம்.

Credit: The Hindutamil

ர்நாடக பள்ளி பாடநூலில் பெரியார், பகத்சிங், நாராயணகுரு குறித்த பாடங்கள் நீக்கப்பட்டதற்கு கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே. சிவகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் கடந்த 16-ம் தேதி திறக்கப்பட்டுள்ளது. 2022-23 கல்வியாண்டிற்கான 7-ம்  வகுப்பு மற்றும் 10-ம் வகுப்புகளுக்கான சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதில், திராவிடர் இயக்கத் தலைவர் பெரியார், சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங், சீர்திருத்தவாதி நாராயணகுரு ஆகியோர் குறித்த பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. மேலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிறுவன தலைவரான கேசவ் பாலிராம் ஹெட்கேவரின் உரை சேர்க்கப்பட்டுள்ளது.

கர்நாடகா: பள்ளி பாடப்புத்தகத்தில் பெரியார், நாராயண குரு பற்றிய பகுதி நீக்கம் – ஆர்எஸ்எஸ் நிறுவனர் ஹெட்கோவரின் உரை சேர்ப்பு

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. பகத் சிங் குறித்த பாடம் நீக்கப்பட்டதற்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார்,”பகத் சிங்கின் வாழ்க்கை வரலாற்றை நீக்கிவிட்டு, ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் ஹெட்கேவர் குறித்த பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. சமூகவியல் பாடத்தில் விஷம கருத்துக்களை பரப்புவதை ஏற்க முடியாது. இன்று பகத் சிங் பற்றிய பாடத்தை நீக்கியவர்கள், நாளைக் காந்தியின் பாடத்தையும் நீக்குவார்கள்” என்று கூறியுள்ளார்.

Source: The Hindu Tamil

Subramanian Swamy யை கேள்வி கேக்கும் தைரியம் Congress க்கு இருக்கா? Haseef | Congress Protest | BJP

 

கர்நாடகா: பாடநூலில் பெரியார், பகத் சிங், நாராயணகுரு குறித்த பாடங்கள் நீக்கம் – காங்கிரஸ் கட்சி கண்டனம்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்