டெல்லி ஜஹாங்கிர்புரி கலவரத்திற்கு காரணமானவர் என்று டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கும் முகமது அன்சார் பாஜகவைச் சேர்ந்தவர் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
கலவரத்தில் ஈடுபட்டவர் டெல்லியின் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் என்று பாஜக குற்றம்சாட்டியிருந்த நிலையில், ஆம் ஆத்மியின் குற்றச்சாட்டு வந்துள்ளது.
இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த கல்காஜி சட்டமன்ற உறுப்பினர் அதிஷி பதிவிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், “ஜஹாங்கிர்புரி கலவரத்திற்கு காரணமானவர் என்று டெல்லி காவல்துறையினரால் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் 35 வயதான முகமது அன்சார், பாஜகவைச் சேர்ந்தவர்” என்று தெரிவித்துள்ளார்.
2017 ஆண்டு நடைபெற்ற வடக்கு ஜஹாங்கிர்புரி முனிசிபில் கார்பரேஷன் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட சங்கீதா பஜாஜிற்கு ஆதரவாக முகமது அன்சார் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
முகமது அன்சார் பிரச்சாரம் செய்த போது, எடுக்கப்பட்ட புகைப்படங்களை அதிஷி அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும், “ஜஹாங்கிர்புரி கலவரத்திற்கு பின்னால் பாஜக உள்ளது என்பது தெளிவாகிறது. டெல்லி மக்களிடம் பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று அதிஷி கூறியுள்ளார்.
ஜஹாங்கிர்புரி கலவரத்திற்கு முக்கிய சதி என்ற குற்றச்சாட்டில் முகமது அன்சாரை ஏப்ரல் 17 தேதி கைது செய்துள்ள டெல்லி காவல்துறை, “அனுமன் ஜெயந்தி ஊர்வலத்திற்குள் நுழைந்த முகமது அன்சார் மற்றும் அவரது நண்பர்கள் சண்டையிட்டு கலவரத்தைத் தொடங்கினர்” என்று தெரிவித்துள்ளனர்.
ஜஹாங்கிர்புரி கலவரம் ஒரு திட்டமிடப்பட்ட செயல் என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
Source: The Wire
ஆரியத்தை எதிர்க்கும் Yuvan Shankar Raja திராவிடன் தான்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.