Aran Sei

காஷ்மீர் : `நோயாளிகளின் உயிரோடு விளையாடும் தொடர் மின்வெட்டுகள்’

குளிர்காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் காஷ்மீருக்குப் புதியதல்ல. ஆனால் இந்த ஆண்டு, முன்னறிவிப்புகள் இல்லாத மின்சாரத் தடைகளால் ஆக்சிஜன் கிடைக்காமல் நூற்றுக்கணக்கான கொரோனா நோயாளிகள் உயிருக்குப் போராடும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்ரீநகரில் உள்ள லால் பஜாரைச் சேர்ந்த கடைக்காரரான நியாஸ் கான் தனது வயதான பெற்றோரை, குறைந்த அளவில் ஆக்சிஜன் சிலிண்டர் துணையுடன் வைத்திருக்கிறார்.

காஷ்மீர் – ஆபத்தான அமைதிக்கிடையே தொடரும் போராட்டம்

“எனது பெற்றோருக்குக் கடுமையான நிமோனியா நோய் இருக்கிறது. அவர்கள் மருத்துவமனையில் இருந்து, வீட்டிற்குக் கொண்டு வரப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாக ஆக்சிஜன் துணையுடன் இருக்குமாறு மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டனர். ஆனால் பகலில் ஆறு மணி நேர மின்வெட்டாலும், இரவில் ஒழுங்கற்ற மின் விநியோகம் ஏற்படுவதாலும் ஒரு ஜெனரேட்டரை வாங்கினேன். அதற்கு எங்கள் தங்க நகைகளை விற்றோம்.” என்று  தி இந்துவிடம் கூறியுள்ளார்.

பாக்-இ-மெஹ்தாப்பைச் சேர்ந்த ரெய்ஸ் குரேஷி, தொடர் மின்வெட்டுகளால் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது என்று கூறியுள்ளார். கடந்த மாதம், இவர் தந்தை தொற்றுநோயால் உயிரிழந்தார் என்று தி இந்து குறிப்பிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் – உரிமையை இழந்த மக்களின் கதை

மேலும், ”கொரோனாவால் பாதிக்கப்பட்ட என் தாய் ஆக்சிஜனை நம்பியே உள்ளார். அவரை போன்ற நோயாளிகளுக்கு உயிர்வாழ ஒரே வழி ஜெனரேட்டர்கள்தான். ஏழை மக்கள்அதற்கு எங்கே போவார்கள்? அரசு சாரா அமைப்புகள் (என்ஜிஓக்கள்) ஆக்சிஜன் சிலிண்டர்களைக் கொடுக்கிறார்கள். ஆனால் அவையும் மின்சாரம் இல்லாமல் வேலை செய்யாது.” என்று ரெய்ஸ் குரேஷி கூறியுள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், காஷ்மீர் மாநிலத்தில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது, நூற்றுக்கணக்கான தொற்று நோயாளிகளுக்கு வீட்டில் வைத்தே சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களுக்கு என்ஜிஓக்கள், இணையவழியில் (வாட்ஸ் அப் குழுக்கள்), கொரோனா மருத்துவமும் மருந்து பரிந்துரையும் கொடுக்கப்பட்டது.

ஆன்லைன் வகுப்பிற்காக மலையேறும் காஷ்மீர் மாணவர்கள்

“வீட்டில் வைத்து சிகிச்சை அளிப்பது இப்போது கடினமாகிவிட்டது. ஜெனரேட்டர்களைக் கண்டிப்பாக வைத்திருங்கள், தேவைப்படுபவர்களுக்கும் கொடுத்து உதவுங்கள் என்று அறிவுறுத்துகிறேன்.” என்று ஜவஹர்லால் நேரு நினைவு மருத்துவமனையின் மருத்துவரும், வாட்ஸ்அப் வழியாக மருத்துவம் பார்க்கும் தன்னார்வலருமான டாக்டர்.நசீர் ஷாமாஸ் தி இந்துவிடம் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் – 24 மணி நேரம் போலீஸ் காவலில் – பத்திரிகையாளரின் அனுபவம்

ஸ்ரீநகரில் உள்ள ஸ்ரீ மகாராஜா ஹரி சிங் மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர்,  “முன்பு, திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளால் நிறைய தொற்றுகள் ஏற்படும். ஆனால் இப்போது பெரிய குடும்பங்களிலிருந்து வருகின்றன. அவர்களின் வசதிக்கு வீட்டில் உள்ள ஒரு அறையில் மட்டுமே ஜென்ரேட்டர் வசதி செய்ய முடிகிறது. மின்வெட்டு நேரங்களில், அந்த ஒரு அறையிலேயே அனைவரும் இருக்க வேண்டியுள்ளது.”  என்று கூறியுள்ளதாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.

மார்ச் மாதத்தில் இருந்து, காஷ்மீரில் அதிகாரப்பூர்வமாக 1.08 லட்சம் கொரோனா தொற்று நோயாளிகளும் 1,676 இறப்புகளும் பதிவாகியுள்ளன .

காஷ்மீர்: உரிமைகள் மறுக்கப்பட்டதன் நினைவு நாள் -ஆகஸ்ட் 5

“சுமார் 7,82,712 நபர்கள் கண்காணிப்புப் பட்டியலில் உள்ளனர். இதில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு 20,275 பேரும், வீட்டுக் கண்காணிப்பில் 43,432 பேரும் உள்ளனர்.” என்று அதிகாரி ஒருவர் பட்டியலிட்டுள்ளதாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.

காஷ்மீர் : `நோயாளிகளின் உயிரோடு விளையாடும் தொடர் மின்வெட்டுகள்’

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்