மத மாற்றத்திற்கு எதிரான சட்டத்தை அமல்படுத்துவதற்கான அவசரச் சட்டத்தை பிறப்பிக்க கர்நாடக அமைச்சரவை இன்று முடிவு செய்துள்ளது.
மத சுதந்திரத்திற்கான பாதுகாப்பு மசோதாவை கர்நாடகா சட்டப்பேரவையில் கடந்த டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் சட்டமன்ற மேலவையில் பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைக்காததால் இந்த மசோதா நிறைவேற்றப் படாமல் நிலுவையில் உள்ளது.
இன்று கூடிய கர்நாடக அமைச்சரவை மத மாற்றத்திற்கு எதிராக ஒரு அவசரச் சட்டம் கொண்டு வர முடிவு செய்துள்ளது,” என சட்டம் மற்றும் சட்டமன்ற விவகாரத்துறை அமைச்சர் மதுசாமி தெரிவித்தார்.
கர்நாடகாவில் மத மாற்றத்தடைச் சட்டத்தை இயற்ற முடிவு – முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு
இந்தியாவில் 8 மாநிலங்கள் மத மாற்றத் தடை சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இதில் கர்நாடகா 9 ஆவது மாநிலமாக இணையும் என்று மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மத சுதந்திரத்திற்கான பாதுகாப்பு மசோதா என்பது மதச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும், ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு வலுக்கட்டாயமாக மாற்றுவதைத் தடை செய்கிறது.
இந்தச் சட்டத்தை மீறுபவர்களுக்கு 25,000 ரூபாய் அபராதமும், 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும். குழந்தைகள், பெண்கள், பட்டியல் மற்றும் பழங்குடியினரை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்பவர்களுக்கு 50,000 ரூபாய் அபராதமும், 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.
‘லவ் ஜிகாத்’ என்ற சொல்லில் எனக்கு உடன்பாடில்லை – பாஜக கூட்டணி கட்சித் தலைவர் சவ்தாலா கருத்து
இந்த மசோதாவில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், மதமாற்றம் செய்யப் பட்டவர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கவும், வெகுசன மக்களை மதமாற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டால் 3 முதல் 10 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனையும், 1 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.
கட்டாயமாக மதமாற்றம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காக நடைபெறும் திருமணங்கள் குடும்ப நீதிமன்றத்தால் செல்லாது என்று அறிவிக்கப்படும் என்று இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மசோதாவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பிணையில் வெளிவர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
Source : DTnext
சர்வாதிகாரிகளுக்கு இது தான் நடக்கும் Sasikanth Senthil Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.