Aran Sei

‘கலவரக்காரர்களை ஒடுக்க புல்டோசர்களை பயன்படுத்த வேண்டும்’ – கர்நாடக அமைச்சர்

த்தரப் பிரதேசம் மற்றும் டெல்லியில் நடந்த கலவரங்களுக்கு காரணமானவர்கள் என குற்றஞ்சாட்டி, பலரின் வீடுகளையும் கடைகளையும் புல்டோசர் பயன்படுத்தி இடித்ததாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, “கர்நாடகாவில் கலவரக்காரர்கள் மற்றும் சமூக விரோதிகளை ஒடுக்க புல்டோசர்களைப் பயன்படுத்துவது குறித்து முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மற்றும் பிற அமைச்சர்களுடன் பேசுவேன்” என்று அம்மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோகா தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் கருத்து குறித்து பேசியுள்ள பாஜக கர்நாடக மாநிலத் தலைவரும், தட்சிண கன்னடா நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினருமான நளின் குமார் கட்டீல், கலவரக்காரர்கள் மீது இதேபோன்ற நடவடிக்கை எடுப்பது குறித்து மாநில அரசு பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சட்டவிரோத கட்டடங்களை புல்டோசர் கொண்டு இடிக்க வேண்டும் – டெல்லி மாநகராட்சி மேயர்களுக்கு டெல்லி பாஜக தலைவர் கடிதம்

னுமன் ஜெயந்தி அன்று, ஜஹாங்கிர்புரி உள்ளிட்ட வடமேற்கு டெல்லியின் சுற்றுப்புற பகுதிகளில் வகுப்புவாத வன்முறைகள் நடந்தேறிய சில நாட்களுக்குப் பிறகு, பாஜக ஆளும் வடக்கு டெல்லி மாநகராட்சியானது ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி, ஜஹாங்கிர்புரி பகுதியில் உள்ள பல வீடுகளையும் கடைகளையும் புல்டோசர் கொண்டு ஏப்ரல் 20 அன்று இடித்து தள்ளியது.

மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புல்டோசர்களைப் பயன்படுத்தி குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் கடைகள் இடிக்கப்பட்டது.

Source: New Indian Express

தனியார்மயத்தினால் கொழுக்கும் முதலாளிகள் |அதிர்ச்சியளிக்கும் Oxfam அறிக்கை

 

‘கலவரக்காரர்களை ஒடுக்க புல்டோசர்களை பயன்படுத்த வேண்டும்’ – கர்நாடக அமைச்சர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்