கர்நாடகாவில் பசுவதை தடுப்பு சட்டம் 2020-ன் கீழ், முதல் வழக்கை கர்நாடக காவல்துறை பதிவு செய்துள்ளது.
சமீபத்தில், பசுவதை தடுப்பு மற்றும் கால்நடை பாதுகாப்பு மசோதா 2020-ஐ கர்நாடகா சட்டசபையில் நிறைவேற்றியது. இச்சட்டத்தின் கீழ் பசுவதையில் ஈடுபடுபவர்களுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஐம்பதாயிரம் முதம் ஏழு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
காங்கிரஸ் எதிர்ப்பையும் மீறி நிறைவேறியது பசுவதை தடுப்புச் சட்டம்
இந்நிலையில், நேற்று (ஜனவரி 13) தாவண்கெரே மாவட்டம் ராணி பெண்ணூரில் இருந்து சிக்கமகளூர் வழியாக மங்களூருவுக்கு 35 மாடுகள் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டுள்ளன. சிருங்கேரி அருகே அந்த வாகனம் சென்றுக்கொண்டிருந்த போது இந்துத்துவ அமைப்பினர் வாகனத்தை மறித்து, ஓட்டுநர், உதவியாளர் உள்ளிட்டோரை கடுமையாக தாக்கியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த சிருங்கேரி காவல்துறையினர் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
“பசுவதை தடுப்புச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது” – அலகாபாத் உயர்நீதிமன்றம்
இதுகுறித்து, சிக்கமகளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரீஷ் பாண்டே, தி இந்துவிடம் கூறுகையில், “உரிய ஆவணங்கள் இல்லாமல் மாடுகளை மங்களூருவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக வாகனத்தின் ஓட்டுநர், உதவியாளர் உள்ளிட்ட இருவர் மீதும் பசுவதை தடுப்பு சட்டம், 2020 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வாகனமும், மாடுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். அவரை தேடும் பணி நடந்து வருகிறது. வாகனத்தின் உதவியாளர் மயக்க நிலையில் இருப்பதால் அவரிடம் இன்னும் விசாரணை தொடங்கவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.
விவசாயிகளை பாதிக்கும் பசு வதை தடுப்புச் சட்டம் – அமைதிக்கு காரணம் சாதியப் படிநிலையே
கர்நாடகாவில் பசுவதை தடுப்பு சட்டம் 2020-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
2017 ஆம் ஆண்டு மே மாதம், மாட்டிறைச்சி விற்பதற்கு தேசிய அளவில் தடை விதித்தது மத்திய அரசு. மாட்டிறைச்சி உட்கொள்பவர்கள் அதிகம் இந்தியாவில் இருப்பதனால், மத்திய அரசின் இந்த தடைக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன.
`பசுக்களுக்குத் தனி அமைச்சகம் அமைக்கப்படும்’ – மத்தியப் பிரதேசம்
தற்போது, இந்தியாவில் பதினொன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தடை இல்லாத போதிலும், பல மாநிலங்களில் பசு, காளை, எருது, கன்று ஆகியவற்றின் இறைச்சியை விற்க/உண்ண தடை இருக்கிறது.இந்தியாவின் பல மாநிலங்களில், குறிப்பாக வட மாநிலங்களில், பசுவதைக்கு எதிரான சட்டங்களும், பசுக்காவல் அமைப்புகளும் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.