கான்பூரில் வகுப்புவாத கலவரம் தொடர்பாக பாஜக பிரமுகர் உள்ளிட்ட 12 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதன்மூலம் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.
கலவரத்தின்போது சமூக ஊடகங்களை பயன்படுத்தியதற்காக 13 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைக்காக 10 பேர் அழைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கலவரத்தில் ஈடுபட்டவர்களாக கருத்தப்படும் நபர்களில் புகைப்படங்களுடன் சுவரொட்டி ஒட்டப்பட்டதை அடுத்து 16 வயது சிறுவன் தானாக வந்து சரணடைந்ததாக காவல்துறை துணை ஆணையர் பரமோத் குமார் தெரிவித்துள்ளார்.
சிசிடிவி மற்றும் செல்போனில் பதிவான காட்சிகள் வைத்து புகைப்படங்கள் சேகரிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
கலவரத்தின்போது சமூக வலைதளங்களில் ஆத்திரமூட்டும் கருத்துக்களை பதிவிட்டதற்காக பாஜக இளைஞரணியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஹர்ஷித் ஸ்ரீவாஸ்தவா கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) பிரசாந்த் குமார் கூறியுள்ளார்.
”எங்கள் சகிப்புத்தன்மை கொள்கையின்படி, நாங்கள் செயல்படுகிறோம். கலவரம் நடைபெற்ற வெள்ளிக்கிழமை (ஜுன் 3) 23 சமூக ஊடக பயனாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று காவல்துறை இணை இயக்குநர் ஆனந்த பிரகாஷ் திவாரி தெரிவித்துள்ளார்.
ஜூன் 3 ஆம் தேதி, முஹம்மது நபிகள் அவர்களுக்கு எதிராக பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா கருத்து தெரிவித்ததற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போது கலவரம் ஏற்பட்டது.
Source: The Wire
மிரட்டிய அரபு நாடுகள் உதறலில் பாஜக Dr Sharmila Interview | Nupur Sharma Comment on Prophet Muhammad
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.