Aran Sei

ஜம்மு காஷ்மீர் தேர்தல்: நிலவும் மும்முனைப் போட்டி

ஜம்மு-காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.  இந்தத் தேர்தல்,  நீக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட குப்கர் கூட்டணி, பாஜக மற்றும் இதர கட்சிகள்  ஆகியவற்றுக்கு இடையே முக்கோண போட்டியாக அமைந்திருக்கிறது என்று தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் (டி.டி.சி) தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஓரணியில் ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சிகள் – மாவட்ட கவுன்சில் தேர்தலில் போட்டி

 

குப்கர் கூட்டணியைச் சேர்ந்த தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி (ஜேகேபிசி) ஆகியவை ஓரணியாகவும், பாஜக, மற்றும் பிறகட்சிகள் ஓரணியாக முக்கோண தேர்தல் களமாக ஜம்மு காஷ்மீர்  இருக்கிறதென தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

குளிர் காலநிலையாக இருந்ததால், வாக்குப்பதிவு நிலையங்களில் காலை 7 மணிக்கு வாக்களிப்பு தொடங்கியதால் மக்கள் உற்சாகமாகக் காணப்பட்டதாக தி வயர் கூறியுள்ளது.

ஜம்மு & காஷ்மீர் – ‘ எதிர்க்கட்சி ஒற்றுமையில் கடுப்பாகிறார் அமித் ஷா ‘

எட்டு கட்டங்களாக நடக்க மாவட்ட வளர்ச்சி கவுன்சில் இருக்கிற தேர்தல்,  முதல் கட்டமாக ஜம்மு-காஷ்மீர் முழுவதும் உள்ள பஞ்சாயத்துகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு  தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு தொடங்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், குளிர்ந்த காலநிலை காரணமாக பள்ளத்தாக்கில் வாக்குப்பதிவு மந்தமான நிலையில் இருந்தது, இருப்பினும், பிற்பகுதியில் வெப்பநிலை அதிகரிக்கும் என்பதால் வாக்குப்பதிவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் அவர்கள் தெரிவித்தனர்.

நடைபெறும்  தேர்தலில் முதல் கட்டமாக  296 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர், அதில் 172 பேர் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வந்தவர்களாகவும், 124 பேர் ஜம்முவைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர்.

காஷ்மீர் : உரிமையை மீட்க ஒன்றுகூடும் கட்சிகள்

மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலின் முதல் கட்டமாக 43 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறதென்றும் அதில் காஷ்மீரில் 25 தொகுதிகளுக்கும், ஜம்முவில் 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மொத்தம் 2,644 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன, இந்த முதற்கட்ட தேர்தலில் 703,620 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஸ்ரீநகர் மாநகராட்சியின் நான்கு வார்டுகளுக்கும், அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மற்றும் ஐஷ்முகாம் நகராட்சி அமைப்புகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றுவருகிறது. முதல் கட்ட வாக்களிப்பு மதியம் 2 மணிக்கு முடிவடையும் என்று அதிகாரிகள் எதிர்ப்பார்ப்பதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒன்றிணைந்த காஷ்மீர் தலைவர்கள் – நிரந்தர தீர்வுகோரி பிரகடனம் – கூட்டத்தை தவிர்த்த காங்கிரஸ்

மாவட்ட வளர்ச்சி  கவுன்சில் தேர்தலோடு 12,153 பஞ்சாயத்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களும் நடைபெற்று வருகின்றன. இவற்றில் 11,814 பேர் காஷ்மீர் பள்ளத்தாக்கிலும், 339 பேர் ஜம்முவிலும் உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் தேர்தல்: நிலவும் மும்முனைப் போட்டி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்