Aran Sei

சிஏஏ எதிர்ப்பு போராளி நடாஷா நர்வாலின் தந்தை மரணம் – சிறையில் இருக்கும் மகள் தந்தையின் முகத்தை காண முடியாத சோகம்

குடியிரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடிதற்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நடாஷா நர்வாலின் தந்தை மகாவீர் நர்வால், கொரோனா தொற்றால் நேற்று மாலை உயிரிழந்தார்.

தந்தை மகாவீர் நர்வாலின் முகத்தைக் இறுதியாக ஒருமுறை காண, நடாஷா நர்வாலை விடுக்க வேண்டும் என #ReleaseNatasha என்ற ஹேஷ்டேக்கில் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினரான மகாவீர் நர்வால் மறைவுக்கு, அக்கட்சியைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தேஜஸ்வி சூர்யா புகாரில் பணிநீக்கம் செய்யப்பட்ட இஸ்லாமியர்கள் – மீண்டும் பணி வழங்க பெங்களுரு பெருநகராட்சி முடிவு

இது தொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ”மூத்த மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர் தோழர் மகாவீர் நர்வால் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த ஆண்டு சட்டவிரோத தடுப்பு நடவடிக்கை சட்டத்தின் (UAPA) கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மகாவீர் நர்வாலின் மகள் நடாஷா நர்வாலை, அவரது தந்தை முகத்தைக் காண முடியாமல் செய்திருப்பது மோடி அரசின் கிரிமினல் செயல். செவ்வணக்கம் மகாவீர் நர்வால்” என பதிவிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக  டெல்லியில் போரட்டங்கள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்த, வடகிழக்கு டெல்லியில் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் தொடர்பிருப்பதாக கூறி, “கூண்டை உடை” (பிஜ்ரா தோட்) இயக்கத்தைத் தொடங்கியவர்களும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களுமான நடாஷா நர்வால் மற்றும் தேவங்கனா கலீதாவை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கில், டெல்லி கர்கர்டூமா நீதிமன்றம் நடாஷாவிற்கு பிணை வழங்கிய நிலையில், அவரை மீண்டும் கடந்த மே மாதம் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தகாவல்துறையினர் அவரை திகார் சிறையில் அடைத்துள்ளனர்.

Source: Indian Express

சிஏஏ எதிர்ப்பு போராளி நடாஷா நர்வாலின் தந்தை மரணம் – சிறையில் இருக்கும் மகள் தந்தையின் முகத்தை காண முடியாத சோகம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்