Aran Sei

ஜஹாங்கிர்புரியில் நடக்கும் சம்பவம் குறித்து நாட்டு மக்களிடம் பிரதமர் உரையாற்ற வேண்டும் – ராஜஸ்தான் முதலமைச்சர் வலியுறுத்தல்

டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் கட்டடங்கள் இடிக்கப்படுவது குறித்து, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற வேண்டும் என்றும் அவ்வன்முச்றையைக் கண்டிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து பேசியுள்ள அசோக் கெலாட், “அதிகாரத்தில் உள்ளவர்கள் வன்முறையைத் தூண்டும் முயற்சிகளை ஒடுக்க வேண்டும். அதைக் கண்டிக்க வேண்டும். ஆனால், நடப்பதோ அதற்கு நேர்மாறாகதான் இருக்கிறது. டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் கட்டடங்கள் இடிக்கப்படுவது குறித்து, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற வேண்டும். அச்செயலுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ஜஹாங்கிர்புரியில் ஆக்கிரமிப்பை இடித்தது மக்களிடையே விஷத்தை பரப்பும் செயல் – டெல்லி காங்கிரஸ் கமிட்டி தலைவர் கருத்து

ராமநவமி அன்று ராஜஸ்தான் மாநிலம் கரௌலியில் நடந்த வகுப்புவாத சம்பவத்தை குறிப்பிட்டு பேசியுள்ள அசோக் கெலாட், “ராஜஸ்தானில் இருக்கும் பிரதமர் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து, ‘என்ன செய்கிறீர்கள்’ என்று கேட்டதாக நான் கேள்விப்பட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியின் ஜஹாங்கிர்புரி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் கட்டடங்களை இடிக்கும் பணிக்கு உச்சநீதிமன்றம் தற்காலிக தடை விதித்திருந்த நிலையில், உத்தரவு மீறி இடிக்கும் பணியில் வடக்கு டெல்லி மாநகராட்சி ஈடுபட்டது. அதை தொடர்ந்து உச்சநீதிமன்றம் உத்தரவின் நகலைக் கொடுத்ததால் இடிக்கப்படுவது நிறுத்திக்கொள்ளப்பட்டது.

Source: The Indian Express

கேரள ஆளுநர் ஆகிறாரா எச்.ராஜா – காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்  திருச்சி வேலுச்சாமி விளக்கம்

ஜஹாங்கிர்புரியில் நடக்கும் சம்பவம் குறித்து நாட்டு மக்களிடம் பிரதமர் உரையாற்ற வேண்டும் – ராஜஸ்தான் முதலமைச்சர் வலியுறுத்தல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்