இந்தியா எப்போதுமே அகண்ட பாரதமாகத் தான் இருந்திருக்கிறது என்று கூறிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் கருத்துக்கு பதிலளித்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் கபில் சிபல், “மனிதர்கள் எப்போதும் மனிதர்களாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ இதழான பாஞ்சஜன்யாவிற்கு அவர் அளித்த பேட்டியில் தான் மோகன் பகவத் இவ்வாறு கூறியுள்ளார்.
அதில், “இந்து சமுதாயம் கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக போரை சந்தித்து வருகிறது. இந்தப் போர் அந்நிய படையெடுப்புகள் மூலம் ஏற்பட்ட அத்துமீறல், அந்நிய சித்தாந்தங்களின் தாக்கங்கள், வெளிநாட்டுச் சதி ஆகியனவற்றிற்கு எதிரானதாக இருந்திருக்கிறது. சங் பரிவாரம் இந்தப் போரில் தன்னால் இயன்ற உதவிகளை செய்துள்ளது. இதைப் பற்றி நிறைய பேர் பேசியுள்ளனர். இதனால் தான் இந்து சமுதாயம் விழித்துக் கொண்டது.
தன்பாலின ஈர்ப்பாளர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை மதிக்க வேண்டும்: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்
ஆகையால் போரில் இருப்பவர்கள் சற்றே மூர்க்கத்தனமாக இருப்பதும் இயல்பே. இந்தியா எப்போதுமே அகண்ட பாரதமாகத் தான் இருந்திருக்கிறது. ஆனால் இந்தியா தனது இந்து உணர்வை மறந்தபோதெல்லாம் பிரித்தாளப்பட்டுள்ளது. இந்து என்பது நமது அடையாளம், நமது பண்பாட்டு அம்சம், நமது தேசியம். இந்துக்கள் என்றுமே நாங்கள் சொல்வது மட்டுமே சரி என்று சொல்வதில்லை. நீங்கள் உங்கள் கருத்தில் உள்ளீர்கள். நாங்கள் எங்கள் கருத்தில் சரியாக இருக்கிறோம். இதில் சண்டை எதற்கு. ஒன்றாக இணைந்தே செல்வோம் என்பதுதான் இந்துக்களின் பார்வை” என்று கூறியுள்ளார்.
மோகன் பகவதியின் கருத்திற்கு பலதிலடி கொடுத்துள்ள கபில் சிபல், “இந்தியா எப்போதும் அகண்ட பாரதமாக இருக்க வேண்டும் என்றால், அதே சமயம் மனிதர்களும் மனிதர்களாகவே இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
Source : india today
Vck to hold protest against Governor Rn Ravi – Sangathamizhan Interview | Thiruma| Dmk Vs Governor
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.