சென்னை கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த ஆஷிக் மீரான் அவரது மனைவியுடன் தனது மகனிற்கு சேர்க்கை கோரி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார்ப் பள்ளிக்குச் சென்றுள்ளார். அப்பொழுது ஆஷிக் மீரான் அவர்களின் மனைவி ஹிஜாப் அணிந்துள்ளதால் பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.
ஹிஜாபை கழற்றி விட்டுப் பள்ளிக்குள் நுழையுமாறு ஆஷிக் மீரானின் மனைவியைப் பள்ளி நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. இதனால் கோபமடைந்த ஆஷிக் மீரான் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார். ஆனால் பள்ளி நிர்வாகம் தனது முடிவில் உறுதியாக இருந்துள்ளது. இதனையடுத்து பள்ளி நிர்வாகத்தின் மீது சோலையூர் காவல் நிலையத்தில் ஆஷிக் மீரான் புகார் அளித்துள்ளார்.
Source : The New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.