2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின்போது, நரோடா காம் படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள புலாபாய் வியாஸ், ஹரித்வாரில் நடைபெறும் மத நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள அகமதாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பிணையில் உள்ள வியாஸ், குஜராத் மாநிலத்தை விட்டு வெளியேறக் கூடாது. நீதிமன்ற அனுமதியுடன் மட்டுமே மாநிலத்தை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்று 2008 ஆண்டு வழங்கப்பட்ட பிணையின் நிபந்தனைகள மாற்றக் கோரி அகமதாபாத் நீதிமன்றத்தில் வியாஸ் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
11 இஸ்லாமியர்கள் படுகொலைக்குக் காரணமாக 2002 ஆம் ஆண்டு நரோடா காம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 84 பேரில் வியாஸும் ஒருவர்.
அயோத்தியில் இருந்து கரசேவர்கள் திரும்பிக் கொண்டிருந்த சபர்மதி ரயிலின் எஸ்-6 கோச் தீக்கிரையாக்கப்பட்டது. 59 பேர் உயிரிழக்க காரணமாக இருந்த இந்த சம்பவம் நடைபெற்ற அடுத்த நாளான பிப்ரவரி 28, 2002 ஆம் தேதி நரோடா சம்பவம் நடைபெற்றது.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பிறகு நடைபெற்ற 9 வகுப்புவாத சம்பவங்களில் நரோடா காம் ஒன்றாகும். இந்த சம்பவம்குறித்து விசாரிக்க உச்சநீதிமன்ற உத்தரவின் பெயரில் 2008 ஆண்டு சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இந்த ஒரே வழக்கில் தான் விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளது. மேலும், விசாரணை இறுதி கட்டத்தில் இருப்பதாக கூறப்பட்டுகிறது.
ஜோத்பூர் கலவரம்: மோதலில் ஈடுபட்டவர்களுக்கு இடையே நடைபெற்ற அமைதி கூட்டத்தைப் புறக்கணித்த பாஜக
வியாஸ் அவரது மனுவில், ஹரித்வாரில் அகில உலக காயத்ரி பரிவார் ஏற்பாடு செய்திருக்கு மத நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிணை நிபந்தனையை மாற்றியமைக்குமாறு கோரியிருந்தார்.
மத அமைப்பின் வாழ்நாள் உறுப்பினராக இருப்பதாக தெரிவித்துள்ள வியாஸ், நாடு முழுவதும் அந்த அமைப்பு நடத்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார். கடந்த காலங்களில் 20 சந்தர்பங்களில் இது போன்ற நிவாரணம் வழங்கப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாஸின் மனுமீது எந்த ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றும், நீதிமன்றத்தின் விருப்பத்திற்கு முடிவை விட்டுவிடுவதாக சிறப்பு வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.
ஹரித்வாரில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து ஆறு மாத காலத்திற்கு பிணை நிபந்தனைகளை நிறுத்தி வைப்பதாக மனுவை விசாரித்த சிறப்பு புலனாய்வு நீதிபதி சுபாதா பக்சி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் வியாஸ் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பும் பயணத்தில் இருந்து திரும்பி 48 மணி நேரத்திற்குள்ளும் வழக்கில் விசாரணை அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Source: The Wire
ஷமூக ஆர்வலர்களுக்கு இன்னுமா பத்தல | Rajiv Gandhi Interview | Sumanth C Raman | Rangaraj Pandey
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.