Aran Sei

குஜராத் கலவர வழக்கு: சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 17 பேரைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேர் விடுதலை

குஜராத் கோத்ரா கலவரத்தின் போது, 2 குழந்தைகள் உள்பட 17 பேரைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேரை விடுதலை செய்து பஞ்ச்மஹால் மாவட்ட ஹலோல் நகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2002 ஆம் ஆண்டு பஞ்சமஹால் மாவட்டத்தின் டெலோல் கிராமத்தில் நடைபெற்ற கலவரத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 22 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் எதுவும் இல்லாத காரணத்தால் அனைவரையும் அம்மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்தது. இவர்களில் 8 பேர் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இறந்ததால் இவர்கள் மீது விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை.

பிரதமர் மோடி மற்றும் குஜராத் கலவரம் குறித்த பிபிசி ஆவணப்படத்தை குடியரசு தினத்தன்று கேரளாவில் வெளியிட பல்வேறு அரசியல் கட்சிகள் முடிவு – பாஜக கடும் எதிர்ப்பு

சாட்சிகளை தேடும் முயற்சியில் ஒரு ஆற்றின் கரையிலிருந்து எலும்புகளை காவல்துறையினர் மீட்டனர். ஆனால் அவை இறந்தவர்களின் அடையாளத்தைக் கண்டறிய முடியாத அளவுக்கு எரிந்து இருந்தது. இந்த வழக்கில் சாட்சியாக இருந்த இறந்தவர்களின் உடல்கள் சாட்சியங்களை அழிக்கும் நோக்கத்துடன் எரிக்கப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் குற்றம் சாட்டினர்.

இதனால், போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி, குற்றவாளிகள் 22 பேரும் விடுதலை செய்யப்படுவதாகவும், அதில் 8 பேர் விசாரணையின்போதே இறந்துவிட்டதாகவும் குற்றம் சட்டப்பட்டவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர் சோலங்கி கூறியுள்ளார்.

Source : the hindu

இந்தி திணிக்கிற கனவு கண்டிப்பா நடக்காது | Hindi Imposition | Vikraman Interview | Maruthaiyan minority community

குஜராத் கலவர வழக்கு: சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 17 பேரைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேர் விடுதலை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்