Aran Sei

கொரோனா தொற்றை கணிக்க தவறிய இந்தியாவின் சூப்பர் மாடல் – சூத்ரா மாதிரி குறித்து ஆய்வாளர்கள் கருத்து

ந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஏறத்தாழ 4 லட்சத்தை நெருங்கும் சூழலில் கொரோனாவினால் ஏற்படப்போகும் பாதிப்புகளைக் கணிக்க மத்திய அரசு உருவாக்கிய ‘சூத்ரா’ மாதிரி(sutra MODEL) குறித்து பல ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதே போன்று, சூத்ரா மாதிரியின் கணிப்புகள்குறித்து தெரிவித்த கொரோனா கட்டுப்படுத்தல் பணியில் ஈடுபடும் அதிகாரி, “சூத்ரா குழுவின் கணிப்புகள் முக்கியமான ஒன்று. ஆனால் அது தனித்துவமானதோ, தீர்க்கமானதோ அல்ல” என்றும் கூறியுள்ளார்.

மராத்தா இடஒதுக்கீடு ரத்து; 50% கட்டுப்பாட்டை மறுபரிசீலினை செய்ய நீதிமன்றம் மறுப்பு; 69% இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து

கொரோனா “இந்தியா தேசிய சூப்பர்மாடல்” என்று அழைக்கப்படும் சூத்ரா மாதிரியின்ஆய்வுக் கணிதவியலாளர்கள் மற்றும் தொற்றுநோயியல் நிபுணர்களைக் கொண்ட ஒரு நிபுணர் குழுவின் பகுப்பாய்வாகும். இந்தக் குழுவில் அகர்வால், ஹைதராபாத்தின் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் மின் பொறியியல் பேராசிரியரான வித்யாசாகர் மற்றும் குழந்தை நெஃப்ரோலாஜிஸ்ட் மற்றும் துணைத்தலைவர் மாதுரி கனிட்கர், ராணுவத்தின் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்கள் (மருத்துவம்) ஆகியோர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மே 2 அன்று சூத்ரா’ மாதிரியைக் கண்காணிக்கும் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா கொரோனா இரண்டாம் அலையில் ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் ஏறத்தாழ 1 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்று கணித்திருந்தாகவும் ஆனால் களநிலவரம் அதற்கு முற்றிலும் வேறுபட்டிருந்தது” என்றும் தெரிவித்திருந்தனர்.

மேற்கு வங்கத்தில் நடப்பது என்ன? – செய்திகளின் உண்மைத்தன்மை குறித்த ஆய்வு

சூத்ரா (SUTRA (Susceptible, Undetected, Tested (positive), and Removed Approach) மாதிரி முதன்முதலாகக் கவனத்தைப் பெற்றது கடந்த அக்டோபர் மாதம் தான். அப்போது சூத்ரா மாதிரியின் அதிகாரிகள் இந்தியா கொரோனா தொற்று அலையின் உச்சத்தை கடந்துவிட்டது என்று தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், செப்டம்பர் மாதம் ஒருநாளைக்கு 97,000 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்த பிறகு தொற்று எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்த நிலையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அந்தக் குழுவின் ஆய்வாளர் எம். வித்யாசாகர், 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 10.6 மில்லியன் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவார்கள் என்றும், அதே சமயம் டிசம்பர் மாதம் 50,000க்கும் குறைவானவர்கள் கொரோனா தொற்றால் பாதிப்படைவார்கள் என்றும் கூறியிருந்தார். அந்தச் சமயத்தில் அக்டோபர் மாதம் 7,80,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர் என்பது கவனிக்கத்தக்கது.

மோடி அவர்களே! பிரதமராக இருக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டீர்கள் – அருந்ததி ராய்

இந்நிலையில், சூத்ரா மாதிரியின் கணிப்புகள் தோல்வியடைந்த நிலையில், அதுகுறித்து தெரிவித்த தேசிய உயிரியல் அறிவியல் மையத்தின் உயிரியல் வல்லுநர் முகுந்த் தத்தை, “மத்திய அரசு வடிவமைத்துள்ள இந்தப் பெயரளவிலான சிறப்பு குழு அடிப்படையிலேயே குறைபாடுடடையது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

மேலும், சூத்ரா மாதிரிகுறித்து தெரிவித்த அந்தக் குழு உருவாக்கப்பணியில் ஈடுபட்ட ஆய்வாளர் அகர்வால், “இந்தக்குழு பல்வேறு தேவைகளுக்காக உருவாக்கப்பட்டது. ஆனால் எதிர்காலத்தில் எவ்வளவு பாதிப்புகள் ஏற்படும் என்பதை கணிப்பதில் குழு ஒழுங்காக செயல்படவில்லை” என்று கூறியுள்ளார்.

மேலும், இந்த மாதிரி தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சூத்திரம் எப்போது நிலைத்த மாறிலியில் மாற்றம் ஏற்படும் என்பதை கூறத்தவறுவதாகவும், அதன்காரணமாக அதிகரிக்கும் தொற்று எண்ணிக்கையை முன்கூட்டியே கணிக்க இயலவில்லை எனவும் ஆய்வாளர் அகர்வால் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 11 நோயாளிகள் உயிரிழப்பு – ஆக்சிஜன் பற்றாக்குறை என உறவினர்கள் குற்றச்சாட்டு

சூத்ரா மாதிரியில் அதிகளவில் அளவுரு(PARAMETER)க்கள் இருப்பது குறித்து தெரிவித்த இந்திய கணிதவியல் நிறுவனத்தின் உயிரியல் கணக்கீட்டாளர் ராகுல், “உங்களிடம் அதிகமான அளவுருக்கள் இருப்பது மிகுந்த அபாயம் மிக்கது. களபுள்ளிவிவரங்கள் கணக்கில் எடுக்கப்படாததால் கொரோனா இரண்டாம் அலையை சரியாக கணிக்கவில்லை” என்றும் மின்னஞ்சல் வாயிலாக கூறியுள்ளார்.

SOURCE; THE HINDU

 

கொரோனா தொற்றை கணிக்க தவறிய  இந்தியாவின் சூப்பர்  மாடல் –  சூத்ரா மாதிரி குறித்து ஆய்வாளர்கள் கருத்து

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்