அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிக்கு, கிரிக்கெட் வீரரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீர், ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.
இதுகுறித்து, பாஜகவை சேர்ந்த கிழக்கு டெல்லி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கவுதம் கம்பீர், அயோத்தியில் கட்டப்படவுள்ள ராமர் கோயிலுக்கு, அவர் சார்பாகவும் அவரின் குடும்பத்தின் சார்பாகவும் ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளதாக நேற்று (ஜனவரி 21)தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோயிலுக்கு நன்கொடை வாங்கும் பேரணிகள் – கலவரத்தை ஏற்படுத்தும் சங்பரிவார்
மேலும் அறிக்கையில், “புகழ்பெற்ற இந்த அயோத்தி ராமர் கோயிலை கட்டுவதென்பது அனைத்து இந்தியர்களின் கனவாக இருந்து வருகிறது. இறுதியாக, இந்த நீண்டகால பிரச்சினைக்கு ஒரு முடிவு கிடைத்துள்ளது.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது ஒற்றுமைக்கும் அமைதிக்கும் வழி வகுக்கும் என்றும் இந்த முயற்சிக்கு என்னிடமிருந்தும் என்னுடைய குடும்பத்தினரிடமிருந்தும் ஒரு சிறிய பங்களிப்பு வழங்குகிறேன் என்றும் கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.