கடந்த பத்து ஆண்டுகள் இந்தியத் தொழிலதிபர் அதானியின் சொத்து மதிப்பு 1830 விழுக்காடு அதிகரித்துள்ளதாக எம் த்ரி எம் ஹுருன் (2022, M3M Hurun) அமைப்பு தெரிவித்துள்ளது.
அதே காலகட்டத்தில் அம்பானியின் சொத்து மதிப்பு 400 விழுக்காடு அதிகரித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
2021 ஆண்டில் கௌதம் அதானி 4,900 கோடி அமெரிக்க டாலர் சொத்து சேர்த்துள்ளார். இது உலகின் முதல் மூன்று பணக்காரர்களான எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ், பெர்னார்ட் அர்னோல்ட் ஆகியோர் 2021 ஆண்டு சேர்த்த சொத்துக்களைவிட அதிகம்.
‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படமும் பிரதமர் மோடியும் – அ.மார்க்ஸ்
கச்சா எண்ணெய் முதல் சில்லறை விற்பனைவரை வர்த்தகம் செய்யும் நிறுவனமான ரிலையன்ஸ் குழுமத்தின் முகேஷ் அம்பானியின் 1030 கோடி அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு ஆண்டு 24 விழுக்காடு வீதம் அதிகரித்து வருகிறது.
துறைமுகங்கள் முதல் எரிசக்தி உற்பத்திவரை ஈடுபட்டுள்ள அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 153 விழுக்காடு வரை அதிகரித்து 8100 கோடி அமெரிக்க டாலரை எட்டியதால், இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
இந்த பட்டியலில் எச்.சில்.எல்லின் ஷிவ் நாடார், சீரம் இன்ஸ்டிடியூட்டின் சைரஸ் பூனாவாலா, ஆர்சிலர் மிட்டல் நிறுவனத்தின் லக்ஷ்மி மிட்டல் ஆகியோர் முறையே அடுத்த மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.
69 நாடுகளில் இருந்து 2,557 நிறுவனங்களைச் சேர்ந்த 3,381 பணக்காரர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகள் இந்திய தொழிலதிபர்கள் ஒட்டுமொத்தமாக 70 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் வரை சொத்து சேர்த்துள்ளனர். இது சுவிட்சர்லாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தின் ஒரு மடங்கு, ஐக்கிய அரபு அமீரகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தின் இரண்டு மடங்கு ஆகியவற்றின் கூட்டுத் தொகைக்கு இணையானது.
அசுத்தமானது பெண்களின் மாதவிடாயா? பாஜகவினரின் அறிவா? – சூரியா சேவியர்
உலக மக்கள் தொகையில் 18 விழுக்காடு மக்கள் கொண்ட இந்தியாவில், உலக அளவில் அறியப்பட்ட 8 விழுக்காடு பணக்காரர்கள் உள்ளனர். இது 5 ஆண்டுகளுக்கு முன்பு 4.9 விழுக்காடாக இருந்தது.
Source : The Wire
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.